- அஸ்ரப் ஏ சமத் -
ஏற்கனவே தயார் செய்த ஹஜ் கோட்டா பட்டியலை உடன் ரத்துச் செய்யுமாறு உச்ச நீதிமன்றத்தால் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஹஜ் சம்பந்தமாக உச்ச நீதிமன்றத்தில் செரண்டிப் ஹஜ் முகவர்களினால் ஹஜ்
கோட்டா பகிர்ந்தளிப்பில் அநீதி இழைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்து
அடிப்படை உரிமை வழக்கொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு நேற்று
3வது முறையாக விவதாத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
வழக்கினை விசாரித்த உயர் நீதிமன்ற நீதியரசர்கள் ஏற்கனவே தயார் செய்த ஹஜ்
கோட்டா பட்டியல் உடன் ரத்துச் செய்துள்ளதுடன், பௌத்த சாசன மத விவகார
அமைச்சின் செயலாளர், முஸ்லிம் சமய திணைக்களப் பணிப்பாளர் ஆகியோருக்கு இவ்
அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கிரிட்டிரியா முறைப்படியும் நியமிக்கப்பட்ட முகவர்களது புள்ளி
அடிப்படையில் புதிதாதக ஹஜ் கோட்டா பகிர்ந்தளிப்பு பட்டியலை 2 நாட்களுக்குள்
தயார் செய்து நீதிமன்றத்திடம் ஒப்படைக்கும்படி பணிப்புரை
விடுக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு மீண்டும் எதிர்வரும் ஆகஸ்ட் 1ஆம்
திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த செரண்டிப் ஹஜ் முகவர்களின் செயலாளர்:
அநீதி இழைக்கப்பட்ட எங்களுக்கு உயர் நீதிமன்றம் நீதியைப் பெற்றுத் தந்துள்ளது. ஏற்கனவே பட்டியல் ஜித்தாவுக்கு அனுப்பட்டிருந்தாக அமைச்சர் பௌசி தெரிவித்திருந்தார். உயர் நீதிமன்றத்தில் இடைக்கால தடைஉத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கையில் எவ்வாறு அவர் பட்டியலை அனுப்ப முடியும் என கேள்வியெலுப்பினார.

0 Comments