இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 298 பயணிகளும் மேல் உடல் கருகி பலியாகினர். மேலும் இந்த விமானம் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சிப் படையினர்களால் ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் முதன்முதலாக இந்த விபத்தில் பலியான விமான பயணிகளின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
நொறுங்கி விழுந்த மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் ஒன்பது மைல்கள் தூரத்திற்கு சிதைந்து விழுந்துள்ளதாகவும், மனித உடல்களும் விமானத்தின் எரியும் பாகங்களும் ஆங்காங்கே பயங்கரமாக காட்சியளிப்பதாகவும், பத்திரிகை புகைப்படம் எடுப்பவர்கள் கூறியுள்ளனர்.

இந்த தாக்குதலுக்கு ரஷ்யாவின் உளவுப்படை அதிகாரிகளே காரணம் என்றும், அவர்கள் கொடுத்த திட்டத்தின்படிதான் விமானம் வீழ்த்தப்பட்டுள்ளதாகவும் உக்ரைன் பாதுகாப்பு அதிகாரியின் தலைவர் குற்றம் சாட்டியுள்ளார்.
ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்க செனட்டர் ஜான் மெக்கெய்ன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த விபத்தில் பலியான 298 பேர்களில் 80 பேர் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் விமானம் கிளம்பிய ஒருசில நிமிடங்கள் தாமதமாக விமான நிலையத்திற்கு வந்த பிரிட்டன் தம்பதி இந்த விபத்தில் இருந்து உயிர் தப்பியுள்ளனர்.
அவர்கள் இந்த விபத்து குறித்து கூறுகையில், தாங்கள் சரியான நேரத்திற்கு விமான நிலையம் வந்திருந்தால் இந்நேரம் தங்கள் உயிர் பிரிந்திருக்கும் என்றும், கடவுள்தான் எங்களை விமான நிலைய அதிகாரி வடிவில் காப்பாற்றியுள்ளார் என்றும் தெரிவித்துள்ளனர்.
இப்படியான பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எமது page ஜ like பன்னுங்கள்
✔ Like US: https://www.facebook.com/kalpitiyavoice
✔ Follow Us: https://twitter.com/kalpitiyavoice
✔ Visit Us: http://www.kalpitiyavoice.com/

0 Comments