Subscribe Us

header ads

டோனிக்கு இன்று பிறந்த தினம்

இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் மஹேந்திர சிங் டோனி, இன்று தனது 33 ஆவது பிறந்த தினத்தை கொண்டாடுகிறார்.

2004 ஆம் ஆண்டு பங்களாதேஷ_க்கு எதிரான போட்டி மூலம் சர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகமான டோனி,    தனது விக்கெட் காப்பு திறமையாலும் அதிரடி துடுப்பாட்டத் ஆற்றலாலும் இந்திய அணியின் முக்கிய வீரர்களில் ஒருவராக விரைவாக இடம்பிடித்தார்.

எம்.எஸ். டோனி இதுவரை  இதுவரை 83 டெஸ்ட் போட்டிகளில் 6 சதங்கள், 29 அரைச்சதங்கள் உட்பட 4459 ஓட்டங்களைக் குவித்துள்ளதுடன் 263 தடவை எதிரணியினரை ஆட்டமிழக்கச் செய்துள்ளார்.

243 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் 9 சதங்கள்,  54 அரைச்சதங்கள் உட்பட 8046 ஓட்டங்களையும் குவித்துள்ளதுடன் 304 தடவை எதிரணியினரை ஆட்டமிழக்கச் செய்துள்ளார். 49 சர்வதேச இருபது20 போட்டிகளில் 822 ஓட்டங்களை அவர் பெற்றுள்ளார்.

2007 ஆம் ஆண்டு இந்திய அணித்தலைவராக நியமிக்கப்பட்ட டோனி, போட்டிகளை வெற்றிகரமாக நிறைவுசெய்யக்கூடிய ஒரு வீரராக  புகழ்பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.   

Post a Comment

0 Comments