-Safwan Basheer-
பலஸ்தீனத்தில் இஸ்ரேலியர்களால் அரங்கேற்றப்படும்
அநீதிகளுக்கு எதிராக அதிகமான முஸ்லிம் நாடுகள்
மெளனம் காத்துக் கொண்டு இருக்கும் நிலையில் உலகின்
மிகப்பெரிய செல்வந்த நாடுகளில் ஒன்றான கட்டார் துணிச்சலோடு
காஸாவுக்காக குரல் கொடுத்து வருகின்றது.
கட்டார் ராஜதந்திர ரீதியாக பலஸ்தீன முஸ்லிம்களின் நலனுக்காக
நடவடிக்கைகள் எடுத்து வருவதுடன் இலட்சக்கணக்கான ரியால்களையும் தினம் தினம் கஸாவுக்கு அனுப்பிவருகிறது.
இந்த ரமழான் மாதம் முழுவதும் காஸாவில் ஆயிரக்கனக்கான எமது
உடன்பிறப்புக்கள் உயிரிழந்த துக்கத்தை அனுஷ்டிக்கும் முகமாக
இவ்வருடம் கட்டாரில் நோம்புப் பெருநாள் கொண்டாடங்கள்
சிறியதாகவோ பெரியதாகவோ நடைபெற மாட்டாது என்று கட்டார்
அரசு அறிவித்துள்ளது.
அதிகமான மத்திய கிழக்கு நாடுகள் அமெரிக்கா,இஸ்ரேல் போன்ற
நாடுகளின் அடிமைகளாக செயற்பட்டுவரும் இன்றைய நிலையில்
ஆட்சியாளர்களால் துன்புறுத்தப்படும் இஸ்லாமிய அறிஞர்களுக்கும்
கட்டார் அடைக்களம் கொடுத்து வருகின்றது.
எகிப்து ஆட்சியாளர்களால் கொடுமைப் படுத்தப்பட்ட
ஷைக் கர்ளாவி,சவுதியினால் வெளியேற்றப்பட்ட டாக்டர் அம்ஹரி
மேலும் ஹமாஸ் தலைவர் காலித் மிஷல் போன்றவர்களுக்கும்
கட்டார் அடைக்களம் கொடுத்து வருகின்றது.
மத்திய கிழக்கு முஸ்லிம் நாடுகளின் செயற்பாடுகளோடு
ஒப்பிடுகையில் கட்டாரின் நடவடிக்கைகள் திருப்தியளிக்கிறது.

0 Comments