Subscribe Us

header ads

எஜமானருடன் சேர்ந்து சிகரெட் பிடிக்கும் நாய்

சீனாவில் ஒருவர் வளர்க்கும் செல்ல நாய், அவரை போலவே சிகரெட் பிடிக்கிறது. சீனாவில் ஹெய்லோஜியாங் மாகாணத்தில் வசிப்பவர் லியு. இவரது ஒரு நாய் வளர்க்கிறார். மியா என்ற பெயரிடப்பட்ட அந்த நாய்க்கு 2 வயது. வியாபாரியான லியு, அதிகமாக புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவர். இவர் சிகரெட் பிடிக்கும் போதெல்லாம் அருகில் இருந்து பழகி விட்ட மியாவுக்கு சிகரெட் வாசனையில் ஈர்ப்பு ஏற்பட்டது. அதனால், லியு சிகரெட்டை பற்ற வைத்ததும் மியா எங்கிருந்தாலும் ஓடி வந்து விடும். இதை கவனித்த லியு, ஒரு சிகரெட்டை மியா வாயில் வைத்து பற்றவைத்தார். நாளடைவில் மியாவும் தனது எஜமானரை போலவே சிகரெட் பிடிக்க பழகி விட்டது. 
இப்போது மியா தூங்க செல்வதற்கு முன் கண்டிப்பாக ஒரு சிகரெட் கொடுத்தாக வேண்டும், இல்லாவிட்டால், அதற்கு தூக்கம் வராமல் குட்டி போட்ட பூனை போல் சுத்தி, சுத்தி வரும் என்று லியு கூறுகிறார். மேலும் தனக்காக இல்லாவிட்டாலும் தனது செல்ல நாயின் உடல்நலத்தை காப்பதற்காக சிகரெட் பிடிப்பதை நிறுத்தி விடலாமா என்று லியு யோசிக்கிறார் என்று சீன பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

Post a Comment

0 Comments