Subscribe Us

header ads

கறுப்பு நிற அபாயாக்களை தவிர்க்கும்படி ஆலோசனை

நாட்டின் பெரும்பான்மை சிங்கள மக்களினால் ஏற்றுக்கொள்ளக்கூடிய விதத்தில் இஸ்லாமிய கலாசார முறையிலான ஆடைகளை அணிந்து கொள்ளுமாறும் கறுப்பு நிற அபாயாக்களை தவிர்த்துக் கொள்ளுமாறும் முஸ்லிம்களை ஊக்குவிக்கும் செயற்பாட்டை முன்னணி முஸ்லிம் அமைப்பொன்று முன்னெடுத்துள்ளது.

"உங்கள் கறுப்பு அபாயாக்களை கொண்டு வாருங்கள் நாங்கள் உங்களுக்கு வர்ண அபாயாக்களை வழங்குவோம்' என்று  அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கறுப்பு அபாயாவும் நிகாப்பும் பெரும்பான்மை சிங்கள பௌத்தர்கள் மத்தியில் எதிர்மறையான உணர்வுகளை தோற்றுவிக்கிறது. யாவரும் கறுப்பு உடையில் இருக்கும் போது நாங்கள் சீருடை அணிந்தவர்கள் என்ற மனப்பிரதிமையை கொடுக்கின்றது. நிகாப் பாதுகாப்பு ரீதியான கவலைகளை எழுப்புகிறது என அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமாவின் ஆலோசகர் முஹம்மட் தகாலான் தெரிவித்திருப்பதாக நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை வெள்ளிக்கிழமை குறிப்பிட்டுள்ளது.

 ✔ Like US: https://www.facebook.com/kalpitiyavoice
✔ Follow Us: https://twitter.com/kalpitiyavoice
✔ Follow Us in Groups: https://www.facebook.com/groups/kalpitiyavoice

Post a Comment

0 Comments