உலக கோப்பை கால்பந்து போட்டியில் இன்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப்
போட்டியில் அர்ஜென்டினாவும் நெதர்லாந்தும் மோதின. இதில் பெனால்டி ஷுட்டில்
வெற்றி பெற்று அர்ஜென்டினா இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
இப்போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட 90 நிமிடங்களில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. பின்னர் கூடுதலாக 30 நிமிட நேரம் ஒதுக்கப்பட்டது. அதிலும் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. பின்னர் இரு அணிகளுக்கு பெனால்டி ஷுட் வழங்கப்பட்டது. அதில் தனது நான்கு பெனால்டி ஷுட்களையும் வெற்றிகரமாக கோலாக்கியது அர்ஜென்டினா. மறுபுறம் நெதர்லாந்தின் நான்கு பெனால்டி ஷுட்களில் இரண்டை அர்ஜென்டினா கோல் கீப்பர் ரோமெரோ அபாரமாக பாய்ந்து கோல் விழாமல் தடுத்தார். இதனால் 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அர்ஜென்டினா இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

5-வது முறையாக அர்ஜென்டினா இறுதிப் போட்டிக்கு தகுதி
அர்ஜென்டினா அணி 5–வது முறையாக உலக கோப்பை இறுதிப்போட்டிக்கு தகுதி
பெற்றது. இதற்கு முன்பு 1930, 1978, 1986, 1990 ஆகிய ஆண்டுகளில் தகுதி
பெற்று இருந்தது. இதில் 1978, 1986 ஆகிய ஆண்டுகளில் உலக கோப்பையை
கைப்பற்றியது.
பிரேசிலில் நடைபெற்று வரும் உலக கோப்பை போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஜெர்மனி–அர்ஜென்டினா அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் உலக கால்பந்து இறுதிப்போட்டியில் மோத இருப்பது 3–வது முறையாகும். இதற்கு முன்பு 1986–ல் மெக்சிகோவில் நடந்த போட்டியிலும், 1990–ல் இத்தாலியில் நடந்த போட்டியிலும் மோதி இருந்தன. 1986–ல் மரடோனா தலைமையிலான அர்ஜென்டினா அணி 3–2 என்ற கோல் கணக்கில் வென்று கோப்பையை வென்றது. 1990–ல் லோத்தா மேத்யூஸ் தலைமையிலான ஜெர்மனி அணி 1–0 என்ற கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் பெற்றது.

0 Comments