கிரிக்கெட் விஜயம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க அணிக்கெதிரான 2 ஆவது
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 87 ஓட்டங்களால் வெற்றி
பெற்றுள்ளது.
கண்டி பல்லேகலே மைதானத்தில் நடைபெறுகின்ற இந்தப்
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 49 .2 ஓவர்களில் அனைத்து
விக்கெட்டுக்களையும் இழந்து 267 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
இலங்கை அணிசார்பாக அதிகபட்சமாக ரி எம் டில்ஷான் 86 ஓட்டங்களைப் பெற்றதுடன் ரெயான் மெக்லரின் நான்கு விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.
இந்நிலையில்
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 38.1 ஓவர்கள் நிறைவில் சகல
விக்கெட்டுக்களையும் இழந்து 180 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக் கொண்டது.
தென்னாபிரிக்க
அணிசார்பாக அதிகபட்சமாக அம்லா 101 ஓட்டங்களைப் பெற்றதுடன், மலிங்க நான்கு
விக்கெட்டுக்களையும் டில்ஷான் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
ஜனாதிபதியும் இப்போட்டியை கண்டுகளித்தார்!
இந்த போட்டியை கண்டுகளிப்பதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பல்லேகலைக்குச் சென்றிருந்தார். மத்திய மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ, விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத் கமகே ஆகியோரும் ஜனாதிபதியுடன் அங்கு சென்றிருந்தனர்.

0 Comments