இலங்கையில் ஆயுதங்களுடனான முஸ்லிம் பயங்கரவாதமும் இஸ்லாமிய தீவிரவாதமும்
இயங்கி வருகின்றது. இது தொடர்பில் அரசாங்கமும், உளவுப் பிரிவினரும் கவனம்
செலுத்த வேண்டும். இதனை சாட்சியங்களுடன் நிரூபிக்கத் தயாராகவுள்ளதாகவும்
அவ் அமைப்பு தெரிவித்தது.
கொழும்பு கிருலப்பனையிலுள்ள பொதுபலசேனாவின் தலைமையகத்தில் இடம்பெற்ற
ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது. இங்கு உரையாற்றிய
பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர்;
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ''ராஜாசனத்தில்'' அமர வைத்தது பெளத்த
குருமாரும், சிங்கள பெளத்தர்களுமே ஆவார்கள். இன்று பெளத்த குருமாரையும்,
சிங்கள பெளத்தர்களையும் பயங்கரவாதிகளாக அமைச்சர் ஹக்கீம் உலகம் பூராகவும்
பிரசாரம் செய்கிறார்.
அது மட்டுமல்லாது ஐ.நா. பிரதி ஆணையாளர் நாயகம் உட்பட இலங்கையிலுள்ள
வெளிநாட்டுத் தூதுவர்களிடமும் நாட்டுக்கு எதிராக பெளத்த குருமாருக்கு,
சிங்களவர்களுக்கு எதிராக கருத்துக்களை கூறுகிறார். அறிக்கைகளை
கையளிக்கின்றார்.
காவியுடைய தரித்தோரை அரசாங்கம் கட்டுப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால்
இஸ்லாமிய தீவிரவாதம் தலைதூக்கும் என வெளிநாட்டு ஊடகங்களுக்கு
தெரிவித்துள்ளார்.
2003ஆம் ஆண்டு ஒலுவில் பிரகடனத்தை மறைந்த அஷ்ரப் வெளியிட்டு முஸ்லிம்களை
ஒன்று சேர்ப்பதாக முஸ்லிம் காங்கிரஸை உருவாக்கினார். இதனால் இனவாதம்
தலைதூக்கியது. அதன் பின்னர் உண்மையை புரிந்துகொண்ட அஷ்ரப் தேசிய ஐக்கிய
முன்னணியை உருவாக்கினார்.
ஆனால் இன்று ஹக்கீம் அரசாங்கத்திற்குள்ளேயே இருந்துகொண்டு முஸ்லிம்களை
அச்சுறுத்தி அரசியல் செய்கின்றார். பணத்துக்காகவும், சுகபோக
வாழ்வுக்காகவும், சொத்துக்களுக்காகவும் சோரம் போகிறவர்தான் ஹக்கீம்.
அத்தோடு மாளிகாவத்தை உட்பட கிழக்கில் முஸ்லிம் வலயங்களை உருவாக்க
முயற்சிக்கின்றார்.அவர் 'காஸாக்களை'' உருவாக்கினால் நாம் இஸ்ரேலாக மாறத்
தயாராகவுள்ளோம்.
டிலந்த பெரேரா
நாட்டில் சட்டம் ஒழுங்கு இல்லை. இவ்வாறானதோர் நிலையில் நீதியமைச்சராக பதவி
வகிப்பது வெட்கம். ஆனால் அரசாங்கத்தில் அமைச்சுப் பதவியை வகித்துக்கொண்டு
கருத்து சொன்னால்தான் உலகில் அதற்கு மதிப்பு கிடைக்கும் என்கிறார் ஹக்கீம்.
அரசுக்குள்ளிருந்து கொண்டு அமைச்சர் பதவியை முஸ்லிம்களுக்காக மட்டும்
பயன்படுத்தும் சட்டம் ஒழுங்கு நாட்டில் இல்லையென பாதுகாப்பு அமைச்சரான
ஜனாதிபதியை விமர்சிக்கும் நாட்டை காட்டிக்கொடுக்கும் அரபு சதிகாரர்களின்
கையாளும் தேசத்துரோகியுமான ஹக்கீமை இதற்கு மேலும் அமைச்சரவைக்குள்
வைத்துக்கொள்ளக்கூடாது. உடனடியாக வெளியேற்ற வேண்டும்.
காவியுடை தரித்த பயங்கரவாதம் நாட்டுக்குள் உள்ளதாக விமர்சிக்கின்றார்.
ஆனால், நாட்டுக்குள் ஆயுதங்களுடனான முஸ்லிம் பயங்கரவாதமும் இஸ்லாமிய
தீவிரவாதமும் இயங்குவதை மூடி மறைக்கின்றார். இது தொடர்பாக உளவுப்
பிரிவினரும் அரசாங்கமும் கவனம் செலுத்த வேண்டும்.
இன்று உலகில் அனைத்து நாடுகளிலும் முஸ்லிம் பயங்கரவாதமும், இஸ்லாமிய
தீவிரவாதமும் தலைவிரித்தாடுகிறது. அது இலங்கைக்குள்ளும் வந்து விட்டது.
ஆனால் ஹக்கீம் தெரியாதவர்போல் நடிக்கின்றார்.
இலங்கையை சேர்ந்த இஸ்லாமிய பயங்கரவாதி ஷாகீர் ஹூசைன் சென்னையில் கைது
செய்யப்பட்டபோது, இது இலங்கையில் முஸ்லிம் பயங்கரவாதம் இருப்பதாக பிரசாரம்
செய்வதற்கான ஒரு யுக்தி என்று சொன்னவர் ஹக்கீம்.
முஸ்லிம்களை சங்காரம் செய்வதற்கு பலமுள்ள சக்தியோடு இணைந்து நீண்ட கால சதித்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக சொல்கிறார்.
எனவே, இது தொடர்பில் உளவுப் பிரிவினர் ஹக்கீமிடம் விசாரணை நடத்த வேண்டும்.
2009ஆம் ஆண்டில் பேருவளையில் அடிப்படைவாத முஸ்லிம் குழுவுக்கும், வேறொரு முஸ்லிம் குழுவுக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டது.
2 பேர் கொல்லப்பட்டனர். 40 பேர் காயமடைந்தனர். ஆனால் இச் செய்திகள் அனைத்தும் மூடி மறைக்கப்பட்டது.
ஆனால், அளுத்கமவில் பெளத்த மதகுரு தாக்கப்பட்டதும் பெளத்தர்களுக்கு எதிரான
நடவடிக்கைகளும் மறைக்கப்பட்டு முஸ்லிம்களின் பிரச்சினைகள் மட்டுமே
பூதாகாரமாக்கப்பட்டது. ஊடகங்களும் இதன்போது நடுநிலை வகிக்கவில்லை.
2006ஆம் ஆண்டிலேயே முஸ்லிம் ஆயுதம் தாங்கிய பயங்கரவாதம் தலைதூக்கியது.
அவ்வாண்டு காத்தான்குடியில் முஸ்லிம் மதக் குழுவினரிடையே ஏற்பட்ட மோதலின்
போது ஆயுதங்கள் பாவிக்கப்பட்டு 6 வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன.
அன்றே ஆயுதங்கள் இருந்துள்ளன. இன்று 2014ஆம் ஆண்டு வந்து விட்டது. இப்போது எவ்வளவு தொகை ஆயுதங்களை சேர்த்திருப்பார்கள்.
முஸ்லிம் ஆயுத பயங்கரவாதம் இங்கு இயங்குகின்றது. இதனை நீதிமன்றத்திலும்
நிரூபிக்க தயாராகவுள்ளோம் என்றும் டிலந்த பெரேரா தெரிவித்தார்.
இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் தேசிய அமைப்பாளர் விதார தேரரும் கலந்து கொண்டார்.


0 Comments