Subscribe Us

header ads

அவுஸ்திரேலியா செல்கிறார் ஞானசார தேரர்- அங்குள்ள பௌத்தர்கள் எதிர்ப்பு

இலங்கையில் சர்ச்சைக்குரிய பௌத்த பிக்குவாக மாற்றப்பட்டுள்ள பொதுபலசேனாவின் ஞானசார தேரர் இந்த மாத இறுதியில் அவுஸ்திரேலியாவுக்கு விஜயம் செய்யவுள்ளார்.
இதன்போது அவர் அவுஸ்திரேலியாவில் சமய நிகழ்வுகளில் பங்கேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் அவுஸ்திரேலியாவில் உள்ள பௌத்தர்கள் பலரும் ஞானசார தேரரின் வருகையை எதிர்த்துள்ளனர்.
குறித்த பௌத்த பிக்கு பேசுகின்ற விடயங்கள் மற்றும் அவரின் நடவடிக்கைகள் ஒருபோதும் பௌத்த மத வளர்ச்சிக்கு உதவாது என்பதே அவுஸ்திரேலிய வாழ் பௌத்தர்களின் கருத்தாக இருப்பதாக இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.
ஏற்கனவே அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஞானசார தேருக்கான வீசாவை வழங்க மறுத்துவிட்டன.
இந்தநிலையில் அவுஸ்திரேலியா மாத்திரம் எதற்காக அவருக்கு வீசாவை வழங்கியது என்று அவுஸ்திரேலிய பௌத்தர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
எனவே அவுஸ்திரேலியாவில் உள்ள பௌத்தர்களுடைய சுயகௌரவம் பாதுகாப்பு என்வற்றை உறுதிப்படுத்த வேண்டுமானால் ஞானசார தேரரின் வீசாவை ரத்து செய்ய வேண்டும் என்று இணைத்தளம் அவுஸ்திரேலிய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

✔ Like US: https://www.facebook.com/kalpitiyavoice

Post a Comment

0 Comments