உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு சீன ஜனாதிபதி ஷி ஜிங்பிங் (xi jinping) இலங்கை வரவுள்ளார்.
மூன்று தசாப்தங்களின் பின்னர் சீன ஜனாதிபதியொருவர் இலங்கைக்கு வருவது இதுவே முதற்தடவையாகும்.
சீன முன்னாள் ஜனாதிபதியாக இருந்த லீ
ஷியனியன் 1986ஆம் ஆண்டில் இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டார்.
அதன் பின்னர் இவ்வருடமே சீன ஜனாதிபதியொருவர் இலங்கை வரவுள்ளார்.
அண்மையில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த
ராஜபக்ஷவின் விசேட பிரதிநிதியான பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில்
ராஜபக்ஷ சீனாவுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டார். அவ்விஜயத்தின்
போது அந்நாட்டு உபபிரதமர் யேன் வேன்னை சந்தித்தபோதே சீன ஜனாதிபதியின்
விஜயம் குறித்து தெரிவிக்கப்பட்டது.
இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில்
காணப்படும் உறவை மேம்படுத்தும் நோக்கில் இலங்கை ஜனாதிபதி சீனாவுக்கு விஜயம்
செய்தார். இதனைத் தொடர்ந்து சீன ஜனாதிபதி இலங்கைகு வரவுள்ளமை
குறிப்பிடத்தக்கது.
இவ்விஜயத்தின் பின்னர் இருநாடுகளின் உறவு
மேலும் வலுப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சீன ஜனாதிபதி வரும் நாள்
குறித்த தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.


0 Comments