கினிய தலைநகர் கொனக்றியில் ரமழான்
பண்டிகையையொட்டி கடற்கரையோரத்தில் நடைபெற்ற வைபவமொன்றில் இடம்பெற்ற
சனநெருக்கடியில் சிக்கி குறைந்தது 24 பேர் பலியாகியுள்ளனர்.
கினிய ரப் இசைக்குழுவான இன்ஸ்ரிங் கில்லரிஸின் நிகழ்ச்சியின் போது
இடம்பெற்ற இந்த உயிரிழப்புக்களையடுத்து அந்நாட்டில் ஒரு வார தேசிய துக்க
தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
டோமோ கடற்கரையில் செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்ற இந்த சனநெருக்கடியில் சிக்கி பலர் காயமடைந்துள்ளனர்.
கலாசார நிகழ்வொன்றில் இடம்பெற்ற இந்த சம்பவத்தால் அதிகாரிகள் பெரிதும் அதிர்ச்சியடைந்துள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி அலுவலகத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பலியானவர்களில் 13 சிறுமிகள் உள்ளடங்குவதாக மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன.
✔ Like US: https://www.facebook.com/kalpitiyavoice
✔ Follow Us: https://twitter.com/kalpitiyavoice
✔ Visit Us: http://www.kalpitiyavoice.com/


0 Comments