Subscribe Us

header ads

இலங்கைச் சிறுவர்களைத் துஷ்பிரயோகப்படுத்தி 200 ஆபாசப் படங்களைத் தயாரிப்பதற்கு முயற்சி: பிரான்ஸ் பிரஜையின் உதவியாளர் நீர்கொழும்பில் கைது

 200 ஆபாச் படங்­களைத் தயா­ரிப்­ப­தற்கு பிரான்­ஸ் நாட்­ட­வரொ­ரு­வ­ருக்கு சிறுவர்­களை  வழங்கி இலட்சக் கணக்கில் பணம் பெற்­ற­தாகக் கூறப்­படும் வெளிநாட்­ட­வ­ருக்கு வழி காட்­­டி­யாக தொழில் புரியும் நபரொ­ரு­வரை  நீர்­கொ­ழும்பு பிர­தே­சத்தில் வைத்து சிறுவர் பாது­காப்பு அதி­கார சபை­யின் விசேட பொலிஸ் பிரி­வினர் கைது செய்­துள்­ளனர்.


கைது செய்­யப்­பட்ட இந்த நபரின் வீட்டை வாட­கைக்குப் பெற்று பிரான்ஸ் நாட்­டவர் அந்த வீட்டில் சிறு­வர்­களை துஷ்­பி­ர­யோ­கத்­துக்­குட்­ப­டுத்­தி­யுள்­ள­தாகவும் சிறு­வர்­களைப் பயன்­ப­டுத்தி ஆபாச திரைப்­ப­டங்­களைத் தயா­ரித்து வந்­துள்­ள­தா­கவும் சிறு­வர் பாது­காப்பு அதி­கா­ர­சபை அதி­கா­ரிகள் தெரி­விக்­கின்­றனர்.

இந்த நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டுத்­தப்­பட்ட ஆறு சிறு­வர்கள் தொடர்­பான
தக­வல்­கல்­க­ளையும் பெற்றுக் கொண்டு மேற்­கொண்ட விசா­ர­ணை­களின் அடிப்­ப­டையில் பொலிஸார் இந்த வழி­­காட்­டியைக் கைது செய்­துள்ளனர்.

2002 ஆம் ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்­டு­வரை இந்த பிரான்ஸ் நாட்­டவர் அவ்­வப்­போது  இலங்கைக்கு வந்து ஹிக்­க­­டு­வ, நீர்க்­கொ­ழும்­பு, சீகி­ரிய மற்றும் அநு­ரா­த­புரம் ஆகிய பிர­தே­சங்­க­ளி­லுள்ள ஹோட்­டல்­களில் தங்­கி­யி­ருந்து சிறு­வர்­களை துஷ்­பி­ர­யோ­கத்­துக்­கு உட்­ப­டுத்­தி­யுள்­ள­துடன் அவர்­களை வைத்து ஆபாச இறு­­வட்­­டு­களைத் தயா­ரித்து வந்­துள்­ள­தா­கவும் அதி­கார சபை தெரி­விக்­கின்­றது.

இது போன்ற 200 ஆபாச இறு­வட்­டு­களைத் தயா­ரித்து இந்த நபர் தனது நாட்­டுக்கு எடுத்துச் சென்­றுள்ளார். இந்த பிரான்ஸ் நாட்­டவர் அந் நாட்டு பொலிஸாரால் ஆபாச இறு­வட்­டு­க­ளுடன் கைது செய்­யப்­பட்­டுள்ளார். 

பிரான்­ஸ்  அதி­கா­ரிகள் அங்­குள்ள இலங்கை தூத­ர­கத்தின் மூலம் இந்த பிரான்­ஸ் நாட்­டவர் குறித்த தக­வல்­க­ளையும் அவர் ஆபாச இறு­வட்­டு­களைத் தயா­ரிக்கப் பயன்­ப­டுத்­திக்­கொண்ட இறு­பது சிறு­வர்­க­ளது படங்­க­ளையும் நீதி அமைச்­ச­ருக்கு அனுப்­பி­யுள்­ளது.

இதை­ய­டுத்து சிறுவர் பாது­காப்பு அதி­கார சபை அதி­கா­ரிகள் இது தொடர்­பாக
விசாரணை நடத்தி குறித்த  வழி­காட்­டியை கைது செய்­துள்­ள­னர்.



Post a Comment

0 Comments