869: ஜப்பானின் வடபகுதியில் 8.6 ரிச்டர் அளவிலான பூகம்பம் ஏற்பட்டது.
1540: பிரித்தானிய மன்னர் 8 ஆம் ஹென்ரி, தனது நான்காவது மனைவி ஆன் உடனான திருமணத்தை ரத்துச் செய்தார்.
1790: ரஷ்யாவுடனான போரில் மூன்றிலொரு பங்கு ரஷ்ய கப்பல்களை சுவீடன் கைப்பற்றியது.
1810: ஒல்லாந்தை பிரான்ஸின்ன் ஒரு பாகமாக நெப்போலியன் இணைத்தான்.
1816: ஸ்பானிய ஆட்சியலிருந்து பிரிவதாக ஆர்ஜென்டீனா சுதந்திரப் பிரகடனம் செய்தது.
1868: அமெரிக்காவில் கறுப்பினத்தவர்களுக்கு பூரண பிரஜாவுரிமை அளிக்கும் 14 ஆவதுதிருத்தச்சட்டம் நிறைவேற்றப்பட்டது.
1877: முதலாவது விம்பி;ள்டன் டென்னிஸ் சுற்றுப்போட்டி ஆரம்பமாகியது.
1900: அவுஸ்திரேலியா கண்டத்திலுள்ள பல்வேறு குடியேற்றப் பிராந்தியங்களை ஒன்றிணைத்து அவுஸ்திரேலியா எனும் சமஷ்டி அரசாங்கத்தை அமைப்பதற்கான அரச ஆணையை பிரித்தானிய அரசி விக்டோரியா வழங்கினார்.
1918: அமெரிக்காவின் டென்னஸி மாநிலத்தில் இரு ரயில்கள் மோதிக்கொண்டதால் 101 பேர் உயிரிழந்ததுடன் 107 பேர் காயமடைந்தனர்.அமெரிக்க வரலாற்றில் மிக மோசமான ரயில் விபத்து இதுவாகும்.
1922: அமெரிக்க நீச்சல் வீரர் ஜொனி வீஸ்முல்லர் 100 மீற்றர் ப்றீ ஸ்டைல் நீச்சல் போட்டியை 58.6 விநாடிகளில நிறைவுசெய்து புதிய உலக சாதனை படைத்தார். இவர்பின்னர் திரைப்படங்களில் டார்ஸன் வேடத்தில் நடித்து உலகப் புகழ்பெற்றார்.
1932: பிரேஸில் மத்திய அரசாங்கத்துக்கு எதரான சாவோ போலோ மாநிலம் கிளர்ச்சியில் ஈடுபட்டது.
1958: அமெரிக்காவின் அலெஸ்கா மாநிலத்தில் 534 மீற்றர் உயரமான சுனாமி அலை அடித்தது. வரலாற்றில் பதிவுசெய்யப்பட்ட மிக உயரமான சுனாமி அலை இதுவாகும்.
1982: அமெரிக்காவின் லூசியானா மாநிலத்தில் இடம்பெற்ற விமான விபத்தில்
விமானத்திலிருந்த 145 பேரும் தரையிலிருந்த 8 பேரும் உயிரிழந்தனர்.
2006: ரஷ்யாவின் சைபீரியாவில் விமானமொன்று ஓடுபாதையிலிருந்து விலகி விபத்துக்குள்ளானதால், விமானத்திலிருந்த 200 பேரில் 122 பேர் உயிரிழந்தனர்.
2011: சூடானிடமிருந்து தென் சூடான் சுதந்திரம் பெற்றது.
✔ Like US: https://www.facebook.com/kalpitiyavoice
✔ Follow Us: https://twitter.com/kalpitiyavoice
✔ Follow Us in Groups: https://www.facebook.com/groups/kalpitiyavoice
✔ Follow Us: https://twitter.com/kalpitiyavoice
✔ Follow Us in Groups: https://www.facebook.com/groups/kalpitiyavoice


0 Comments