பேருவளை மற்றும் அளுத்கம பிரதேசங்களில் இடம்பெற்ற கொலைகளும் சொத்து அழிவுகளுக்கும் பொது பலசேனாவின் ஞானசார தேரர் பொறுப்பேற்க வேண்டும். பேருவளை மற்றும் அளுத்கம சிங்களஅல்-ஹுமைசரா மத்திய கல்லூரியில் தஞ்சமடைந்துள்ளார்கள். அவர்கள் மத்தியில் உரையாற்றும்போதே அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் இவ்வாறு தெரிவித்தார்.
இன்று அதிகாலை சவூதியிலிருந்து தமது உத்தியோகபூர்வ விஜயத்தை ரத்து செய்து விட்டு நாடு திரும்பிய அமைச்சர் உடனே அளுத்கமைக்கு விஜயம் செய்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும், அமைச்சர் கூறுகையில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை விடவும் மோசமானவர் ஞானசார தேரர். ஞானசார தேரர் ஒரு மிகப்பெரும் பயங்கரவாதி.
பொது பலசேனாவை தடைசெய்வதற்கும், ஞானசார தேரரை கைதுசெய்து சிறையில் அடைப்பதற்கும் நாட்டில் உள்ள அனைத்து முஸ்லிம்களும் ஒன்று பட்டு கோஷமெழுப்ப முன்வர வேண்டும்.
0 Comments