Subscribe Us

தில்லையடியில் ‘கற்பது எப்படி?’ கல்விக் கருத்தரங்கு

TPT Media

புத்தளம், தில்லையடி முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்கத்தின் அழைப்பின் பேரில் The Puttalam Times (TPT) சமூக ஊடகத்தினால் க.பொ.த. சாதாரணத் தரம் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு, ‘கற்பது எப்படி?’ (How to Study?) கற்றல் வழிகாட்டல் கருத்தரங்கு 2014.06.17 ஆம் திகதி பி.ப. 12.30 மணி முதல் பாடசாலையின் விஞ்ஞானக் கூடத்தில் நடத்தப்பட்டது. இது, TPTயினால் நடத்தப்பட்ட பாடசாலை மட்ட முதலாவது சமூகப் பணி என்பது குறிப்பிடத்தக்கது.

இக் கருத்தரங்கின் வளவாளராக இளைஞர் அபிவிருத்தி ஆலோசகரும் TPT செம்மையாக்குனருமான ஏ. அர்ஷாத் அலி கலந்துகொண்டார். மாணவர்களை அவர்களுக்கு மிக விருப்பமான பாடங்களின் அடிப்படையில் குழுக்களாகப் பிரித்து கலந்துரையாடல்; சந்தேக நிவர்த்தி வடிவில் இக் கருத்தரங்கை நடத்தினார்.

‘பாடங்கள் நினைவில் நிற்பதில்லை’ என்ற மாணவர்களின் சந்தேகத்திற்கு விடையளித்த வளவாளர் அர்ஷாத் அலி, “பாடமாக்குவதால், மனனமிடுவதால் பாட விடயங்கள் நினைவில் நிற்கும் என்ற எண்ணம் தவறானது. அடிக்கடி மீட்டுவதால் பாடங்கள் நினைவில் பதியும். ஒவ்வொரு பாடத்தின் தலைப்பை; அலகுகளை ஒழுங்கு முறைப்படி திரும்பத் திரும்ப வாசிப்பதினால் பாட விடயங்களை மனதில்; நினைவில் பதியவைத்துக்கொள்ள முடியும்” என வழிகாட்டினார்.

கருத்தரங்கின் நிறைவில் தில்லையடி மு.ம.வி. பழைய மாணவர் சங்கத்தின் உப தலைவர் ஜே.எம். தில்ஷான் நன்றியுரையை நிகழ்த்தினார்.

தொகுப்பும் படங்களும்: Hisham Hussain

_____________________________
மேற்படி கருத்தரங்கு சிறப்பாக நடைபெற அனுமதியையும் ஏற்பாடுகளையும் நல்கிய அதிபர் எஸ்.எம்.எம். ஹுதைலின் அவர்களுக்கும் பொறுப்பாசிரியர்களாகக் கடமையாற்றிய எச். அமீரலி, எம்.ஆர்.எம். ரமீஸ் ஆசிரியர்களுக்கும் The Puttalam Timesஇன் மதிப்புக்குரிய அங்கத்தவர்கள் சார்பில்  நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

நிருவாகம்
TPT









Post a Comment

0 Comments