Subscribe Us

header ads

ஸிராத்துல் முஸ்தகீம் பாலத்தில் நடக்கும் நமது போராட்டங்கள்

முஹம்மத் ஹனீஸ்

மற்றுமொரு நமக்கு மறக்க , மன்னிக்க முடியாத சிவப்பு கறைபடிந்த கருப்பு நாட்களுக்காக நாம் தொடர்ந்து கொண்டிருக்கும் போராட்டங்களும் கடியாடைப்புக்களும் , ஹர்த்தால்களும் எல்லோராலும் பாராட்டப்படவேண்டிய ஒன்றும் அதனால் குறிப்பிட்டு சொல்லக்கூடிய நன்மைகளும் நடந்து இருகின்றன, ஆனாலும் தொடர்ந்துகொண்டிருக்கும் போராட்டங்கலாளினால் எதாவது அசம்பாவிதங்கள் ஏற்பட்டு இன்னமும் நெருப்பு தணலாக இருக்கின்ற இப் பிரச்சினையை மீண்டும் கோளுந்து விட்டு எரிய விடுமோ என்று பயம் கொள்ள வைக்கின்றன, அதற்காக நாம் போராட வேண்டாம் என்று சொல்ல வரவில்லை, போராட்டம் என்பது முஸ்லிமாகிய நமது ஈமானுடன் கலந்தது.

எந்த போராட்டமும் சாத்வீக முறையில் இருக்க வேண்டும், வரையறைக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும், பாதிப்பு உள்ளன நமது சகோதர்களையும் சகோதரிகளையும் பார்க்கும்போதும், அவர்களின் பேச்சுக்களையும் கேட்க்கும்போது நமது உள்ளங்கள் கொதிக்கின்றன, நமக்கே அறியாமல் பழிவாங்கும் எண்ணம் நம்மை ஆட்கொள்கின்றன, நமது ஆத்திரமும்,கோபமும் நமது நிலைமையை மாற்றி விடும், இப்படியான மன நிலைமைகளில் இருந்து நம்மை பாதுகாக்க வேண்டும், இதை நான் எனது சுய அனுபுவத்தில் சொல்லுகிறேன்.

இந்த போராட்டங்கள் வடகிழக்கில் வாழும் முஸ்லிம்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது, ஆனால் இந்த போராட்டம் வடகிழக்கிற்கு வெளியே தொடர்ந்து கொண்டு போகும் ஆனால் சில சமயங்களில் அங்கு வாழும் முஸ்லிம்கள் மீண்டும் ஒரு கருப்பு நாளை ஏற்படுத்துமோ என்று பயம் கொள்ள வைக்கின்றது, ஏன் என்றால் சிங்கள ராவய கட்சின் ஒரு முக்கிய தேரர் அறிக்கைவிட்டு இருக்கின்றார் “ இன்னுமொரு இனக்கலவரம் வருமானால் அதற்க்கு முஸ்லிம்கள் தான் கரணம், அதற்க்கு அவர்கள்தான் பொறுப்புதாரிகல்” இந்த கருத்தை நாம் ஆழமாக சிந்திக்க வேண்டும்.

இனவாதிகள் இப்போது தீ பொறியை முஸ்லிம்கள் பக்கத்தில் இருந்து எதிர்பார்கிறார்கள், நாம் செய்யும் சிறிய தவறுகளை வைத்து கொண்டு அவர்கள் மிகபெரிய ஒரு நெறுப்பு கிடங்கை மூட்ட தயாராகி கொண்டு இருக்கிறார்கள், ஆகவே நாம் மிகவும் பக்குவமாக நடந்து கொள்ளுகின்ற காலம் இதுதான், நமது போராட்டங்களையும் நமது உணர்வுகளையும் நிலைபடுத்த வேண்டும், ஏன் என்றால் படைத்த ஆல்லஹ்வே தவிர நமக்கு உதவி யாரும் இல்லை, நமது அரசாங்கம் நம்மை வைத்து விளையாடுகின்றது, நமது அரசியல் பிரதிநிதிகளால் பாவம் எதுவும் செய்ய முடியவில்லை, நமது சகோதர முஸ்லிம் நாடுகள் வருவதற்கு முன் நாம் சாம்பலாகி விடுவோம். சுருக்கமாக சொல்லப்போனால் நமது போராட்டங்கள் சிராத்தல் முஸ்தக்கீம் பாலத்தை கடப்பது போல மிகவும் அமைதியாகவும்ம் பொறுமையாகவும், வேகமாகவும் நமது நோக்கங்களை அடையவேண்டும்.

ஊர்களின் உலமா சபைகளுக்கும், போராட்டங்களை வழி நடத்தும் தலைவர்களுக்கும் கவனத்திற்கு! போராட்டங்களை வழி நடத்தும் தலைவர்கள் அவர்களது சொற்பிரயோகங்களையும் பேச்சுகளையும் நமது மக்கள் மத்தியில் நமது இளைஞர்கள் மத்தியில் மிக கவனமாக பிரயோகிக்க வேண்டும், அவர்களது உணர்வுகளை துண்டி அவர்களை வன்முறையின் பக்கம் திசை திருப்பும் பேச்சுக்களாக இருக்க கூடாது, இதைத்தான் பொது பல சேனா கூட்டத்தில் செய்தது, இதைதான் இந்தியாவின் சிவா சேனா குஜராத்திலும், பாபர் மசூதி இடிப்பதிலும் செய்தது,

நமது இளைஞர்களை கையாள்வது சமூக தலைவர்களது ஒரு பொறுப்பாகும், இதை ஒவ்வொரு ஊர்களின் உலமா சபை நிலைமையை புரிந்து அவர்களை ஆல்லஹ்வின் பக்கம், துஆக்களில் அவர்களின் கவனத்தை செல்லுத்த வைக்க வேண்டும், ஆனால் எந்த ஒரு உலமா சபையும் எந்த ஒரு விசேட தொழுகையோ , விசேட சொற்பொழிவு , பீரார்த்தனையோ ஏற்பாடு செய்ததாக தெரியவில்லை, இனியாவது அவர்கள் இதை அவர்கள் கவனத்திற்கு எடுக்க வேண்டும்.

Post a Comment

0 Comments