அமெரிக்க மக்களின் வாழ்க்கையில் பரபரப்புக்கு கொஞ்சமும் குறைவில்லாமல் இருக்கிறது.
பிலடெல்பியாவில் இப்போதைய பரபரப்பு நபிகளாரின் வழிமுறையைப் பின்பற்றி தாடி வளர்த்துக் கொள்வது!
இதில் என்ன ஆச்சரியம் என்கிறீர்களா?அச்சில் முஸ்லிம்களைப் போலவே முழு ஆடைகளை அணிந்து கொண்டு தாடி வளர்த்துக் கொள்ளும் பழக்கம் இப்போது முஸ்லிமல்லாத அமெரிக்க பிலடெல்பியாவாசிகளிடையே வேகமாக பரவி வருகிறது.
தங்களின் மத நம்பிக்கையைப் பொருட்படுத்தாமல் பிலடெல்பியாவாசிகள் முஸ்லிம்களின் ஆடை கலாச்சாரம் போலவே முழுக்கை மேலாடையையும், நீண்ட கீழாடைகளையும் அணிந்து தாடி வளர்ப்பதில் மோகம் காட்டி வருகிறார்கள். அதிலும் குறிப்பாக ஆப்பிரிக்க-அமெரிக்கர்களிடையே இந்தப் பழக்கம் வேகமாக பரவி வருகிறது. இவர்கள் அணியும் இந்த உடை நம்பிக்கையின் அடிப்படையில் அல்ல; ஆடை அலங்காரம் என்பதே உண்மை.
இந்த ஆடை மோகம் குறித்து சிலர் விமர்சிக்கும்போது, இஸ்லாத்தின் முகமன் கூறும் பழக்கமான ‘அஸ்ஸலாமு அலைக்கும் (உங்கள் மீது இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக!) என்பதை திரித்து ‘அஸ்ஸலாமு பேகம்ஸ்’ (asalama-fakems) என்றும் கிண்டலடிக்கிறார்கள்.
இந்த விமர்சனங்கள் எப்படியிருந்தாலும் அதிலும் குறிப்பாக, தாடி விஷயத்தை எடுத்துக் கொண்டால் அது பிலடெல்பியா தாடியா? அல்லது நபிகளாரின் வழிமுறையின் அடிப்படையிலான சுன்னாஹ் தாடியா? என்பது பிரச்னையல்ல. இந்த தாடி, பலரிடையே அன்பை தோற்றுவிப்பதாக ஆடை அலங்கார நிபுணர் ஆன்டனி ஆன்டர்சன் குறிப்பிடுகிறார்.
இப்பொழுதெல்லாம் அமெரிக்க சலூன்களில் பிலடெல்பியாவைக் குறிக்கும் ‘பில்லி’ தாடி என்றாலே அது முஸ்லிம்களைப் போலவே தாடி ஒதுக்குதல் என்று பொருளாகிவிட்டது.
தாடி வளர்ப்போரிடம்,, “ஏனய்யா இந்த தாடி மோகம்?” – என்று கேட்டால் அவர்கள், “இது கம்பீரமாகவும், கவர்ச்சியாக இருக்கிறது!” – என்று விளக்கம் தருகிறார்கள்.
நல்லவேளை; அலங்காரம் என்ற பெயரில் பிலடெல்பியாவில் பெண்களிடையே புர்கா அணியும் மோகம் வரவில்லை. விரைவில் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்குமில்லை.
Thanks: Philadelphia Daily News


0 Comments