Subscribe Us

header ads

டெல்லியில் மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டே விபத்தில் சிக்கி உயிரிழந்தார்

மும்பையை சேர்ந்தவரும் மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான கோபிநாத் முண்டே இன்று காலை டெல்லி விமான நிலையம் நோக்கி காரில் சென்ற போது விபத்தில் சிக்கினார். விபத்தில் படுகாயமடைந்த முண்டே உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

மருத்துவமனையில் அவரச சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள முண்டேவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சையின் போது அவருக்கு மாரடைப்பும் ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

ஆபத்தான நிலையில் உள்ள அவரை காப்பாற்ற மருத்துவர்கள் தீவிரமாக போராடி வந்த போதிலும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்தார். அவரின் இறுதிச்சடங்கு நாளை நடைபெறும் என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கூறினார்..maalaimalar

Post a Comment

0 Comments