பிரதமர் மோடி பதவி ஏற்பு விழாவுக்கு வந்த நவாஸ்செரீப்பை பள்ளி சிறுவன் போல் இந்தியா நடத்தியதாக இம்ரான் கான் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்தியாவின்
15–வது புதிய பிரதமராக கடந்த மாதம் (மே) 26–ந்தேதி நரேந்திர மோடி பதவி
ஏற்றார். அதில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ்செரீப் பங்கேற்றார்.
அதை
தெடர்ந்து இரு நாட்டு தலைவர்களும் சந்தித்து பேசினார்கள். அப்போது எல்லை
தாண்டும் தீவிரவாதம் குறித்தும், அவற்றை ஒடுக்குவது குறித்தும்
விவாதிக்கப்பட்டது.
காஷ்மீர் பிரச்சினை குறித்தும் பேசப்பட்டது.
ஆனால் அதற்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை. மேலும் ஹுரியத் மாநாட்டு
தலைவர்களையும் நவாஸ்செரீப் சந்திக்கவில்லை.
இந்த தகவலை பிரதமர்
நவாஸ்செரீப்பின் பாதுகாப்பு செயலாளரும், வெளியுறவு துறை ஆலோசகருமான சர்தாஜ்
அஷீஷ் இஸ்லாமாபாத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மேலும் அவர்
கூறும் போது, ‘‘இதுபோன்ற விழாவில் முதன் முறையாக பாகிஸ்தான் பிரதமர்
கலந்து கொண்டது மிகவும் பரபரப்பான சம்பவமாகும் என்றும் கூறினார்.
அதை
தொடர்ந்து நவாஸ்செரீப்பின் இந்திய பயணத்துக்கு கிரிக்கெட் முன்னாள்
வீரரும் பாகிஸ்தான் தெக்ரீக்–இ–இன் சாப் தலைவருமான இம்ரான்கான் கண்டனம்
தெரிவித்துள்ளார்.
டெல்லி சென்ற பிரதமர் நவாஸ்செரீப் இந்திய
தலைவர்களை சந்தித்து பேசினார். அதே நேரத்தில் ஹுரியத் மாநாட்டு
பிரதிநிதிகளை அவர் சந்திக்கவில்லை.
காஷ்மீர் பிரச்சினையில் சுணக்கமான
ஒரு மந்த நிலையை அவர் ஏற்படுத்தி விட்டார். அவரை இந்தியா ஒரு பள்ளி மாணவனை
போன்று நடத்தியது என்று கூறினார்.


0 Comments