Subscribe Us

தர்கா நகர் விவகாரம்; அமைச்சர் ஹக்கீம் - அமெரிக்க தூதுவர் சந்திப்பு

தர்கா நகர், பேருவளை மற்றும் வெலிப்பென்ன உள்ளிட்ட பிரதேசங்களிலுள்ள முஸ்லிம்கள் தாக்கப்பட்ட நிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமிற்கும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் மிச்சேல் ஜே சிசேனிற்கும் இடையிலான முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றது.

அமைச்சர் ஹக்கீமின் இல்லத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பு சுமார் ஒரு மணித்தியாலளங்கள் இடம்பெற்றன.இதன்போது நாட்டில் சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எதிராக கலகங்களை தூண்டிவிடும் பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உட்பட அதன் சூத்திரதாரிகள் கைது செய்யப்பட்டு அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் தெரிவித்தார்.

இனிமேலும் தாமதிக்காது முன்வராவிட்டால், அரசாங்கத்தின் மீது தமது மக்கள் முற்றாகவே நம்பிக்கை இழந்து விடுவர் எனவும் அவர் குறிப்பிட்டார்.
 
இந்த சம்பவங்கள் தொடர்பில் தமது கவலையை தூதுவர்  மிச்சேல் ஜே சிசோன் வெளியிட்டதுடன் நாட்டில் சிறுபான்மையினருக்கு எதிராக இனவாத செயல்களை தமது நாடு உன்னிப்பாக உற்று நோக்கி வருவதாக குறிப்பிட்டார்.

Post a Comment

0 Comments