Subscribe Us

header ads

பௌத்த பிக்கு ஒருவர் காவியுடை அணிந்து வெளிநாடுகளுக்கு செல்லமுடியாமல் போகிவிடும்

அஷ்ரப் ஏ சமத்-
                       
இன்று இந்த சர்வதேச சக்திகளுக்கு தேவைப்படுவது சிங்கள பௌத்தர் என்பது ஒழுக்க சீலமற்ற காட்டு வாழ்க்கையை கொண்ட சாதியெனவும். சிறுபான்மை இன மக்களை தமது இரும்புச் சப்பாத்தின் காலடியில் போட்டு மிதித்து அழித்தொழிக்கும் மிருக வெறி கொண்ட சமூகமென உலகுக்குக் காட்டுவதே ஆகும். 
பௌத்த காவியுடைக்காரர்கள் ஒழுக்கமற்ற புத்தியற்ற பொறுமை இல்லாத ஒரு கூட்டமாகும். சின்ன சம்பவங்களுக்குக் கூட கத்தி,வாள்,பொல்லுகளைத்   தூக்கும் ஒரு கூட்டமாகும்  என காட்ட முயற்சிக்கின்றது என அமைச்சர் விமல் வீரவன்ச கூறினார்.
அமைச்சர் விமல் வீரவன்ச நேற்று கொழும்பில் நிர்மாணத்துறைப்  பயிற்சியாளர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் அவர் உரையாற்றும்போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்த நாட்டில் பௌத்த இயக்கம் உள்ளது அவர்களுக்கு நோர்வேயில் இருந்து பணம் வருகின்றது. முஸ்லீம் அதிபோக்குடையவர்களுக்கு சவூதியில் இருந்து பணம் வருகின்றது. இதன் பின்னணியில் இருந்து செயற்படுவது அமேரிக்காவாகும்.
இப்போது உலககெங்கும் காணப்படுவது விரல்களால் செயற்படும் ஒரு பரம்பரையாகும். அவர்கள் தொலைபேசிகளைக்  கையில் வைத்துக்கொண்டு விரல்களை கொண்டு இயக்கி வருகின்றனர். அத்துடன் சமூக வலையத்தளம் மற்றும் இணையத்தளங்களில் தகவல்கள் குவிக்கப்படுகின்றன. இந்த இணையத்தளங்களில் புத்த பிக்குவின் கையில் பொல் இருப்பதை காட்டும் படங்கள் வெளியிடப்படுகின்றது.
இப்படியே சென்றால் பௌத்த பிக்கு ஒருவர் காவியுடை அணிந்து வெளிநாடுகளுக்கு செல்லமுடியாமல் போகிவிடும். காவியுடைக்கு சர்வதேசத்தில் மதிப்பிழக்கப்படும். இறுதியில் நாட்டின் எதிர்காலம் ஒழுக்கம் கெட்டவர்களின் கைகளில் சிக்கிக்கொள்ளும். முடிவுகள் எடுப்பது அவர்களாகவே இருக்கப்போகின்றது. இப்போது ஏதோ ஒரு சேனா என்னைத் தாக்க ஆரம்பித்துள்ளது. அது எனக்கு பிரச்சினை அல்ல உண்மை சொல்லி எது வரினும் ஏற்கத் தயார்.
ஆனால் நாட்டை இரத்த ஆறாக மாற்றுவதற்கு இடமளிக்க முடியாது. விசேடமாக இளைஞர் பரம்பரையினர்; இதில் சிக்கிக் கொள்கின்றார்கள்.  அளுத்கம மக்கள் சொல்கின்றார்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை தர்கா நகரில் தாக்கியவர்கள் (ஹெல்மட்) தலைக்கவசம் அணிந்திருந்தார்கள் . அவர்கள்  ஊரவர்கள் அல்லர் என்பதாக. இந்த இடத்தில் அந்த பெரும்பாண்மை மக்கள் மௌனம் காக்கும் நிலையே ஏற்பட்டுள்ளது. நாட்டை மயானமாக மாற்றுவதற்கு இடமளிக்க முடியாது -அமைச்சர் விமல் வீரவன்ச எனக் கூறினார்.

Post a Comment

0 Comments