Subscribe Us

2,737.5 சதுர மீட்டரில் மாபெரும் பெயிண்டிங் வரைந்து உலக சாதனை செய்த சீன ஓவியர்கள் குழு (வீடியோ)

உலகிலேயே மிக நீளமான பெயிண்டிங் ஒன்றை வரைந்து
 சீனாவில் உலக சாதனை செய்யப்பட்டுள்ளது. இந்த பெயிண்டிங் 2,737.5 சதுர மீட்டர் உடையது ஆகும். இந்த பெயிண்டிங் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


சீனாவில் உள்ள Yang Yongchun என்பவர் தனது குழுவினர்களின் உதவியால் Jiangsu province என்ற பகுதியில் உள்ள University of China in Nanjing என்ற பகுதிக்கு செல்லும் சாலையில் இந்த பெயிண்டிங்கை வரைந்து சாதனை படைத்துள்ளார்.  இந்த பெயிண்ட்டிங்ஸ் அனைத்தும் 3D தகுதி பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஓவியத்திற்கு  Yang Yongchun அவர்கள் Rhythms of Youth என்ற பெயரை வைத்துள்ளார். சீனாவில் நடைபெற இருக்கும் கோடைக்கால ஒலிம்பிக போட்டிகளின் நினைவாக அதுகுறித்த படங்கள் இந்த ஓவியங்களில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த பெயிண்டிங் 27,986 சதுர அடி நீளம் கொண்டது. அதாவது 2,737.5 சதுர மீட்டர் அளவு கொண்டது ஆகும். இதற்கு முந்தைய உலக சாதனை ஓவியம் 1,120 சதுரமீட்டரில் பிரிட்டன் ஓவியர் Joe Hill என்பவரால் கடந்த 2011ஆம் ஆண்டு வரையப்பட்டது. 


இந்த மாபெரும் சாதனை ஓவியத்தை வரைய Yongchun குழுவினர் 20 நாட்கள் அவகாசம் எடுத்துக்கொண்டதாக கூறப்படுகிறது. சீனாவிற்கு வரும் சுற்றுப்பயணிகள் இந்த ஓவியத்தை மிகவும் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர்.

Post a Comment

0 Comments