2014- உலக கோப்பை கால்பந்து போட்டியில் ‘ஏ’ பிரிவில் உள்ள பிரேசில்-
மெக்சிக்கோ அணிகள் இன்று மோதிய ‘லீக்’ ஆட்டம் கோல் ஏதுமற்ற சமநிலையில்
‘டிரா’வில் முடிந்தது.
ஆரம்பம் முதல் பரபரப்பாக விளையாடிய இரு அணிகளும் தங்களது முதல் கோலை பதிவு செய்ய அதீத அக்கறை காட்டி விளையாடின.
குறிப்பாக, போட்டியை நடத்தும் நாடான பிரேசில் அணியினர், சொந்த மண்ணில் சாதனை படைக்கும் முயற்சியில் வலையை நோக்கி நகர்த்திச் சென்ற பந்துகளை எல்லாம் மெக்சிக்கோ அணியின் கோல் கீப்பர் மிக சாதுர்யமான வகையில் தடுத்து ஆட்கொண்டதால், பிரேசிலின் கனவுக் கோட்டை தவிடுபொடியானது.
ஆட்டத்தின் இலக்கு நேரமான 90 நிமிடங்களை கடந்து, 3 நிமிட உபரி நேரம் வழங்கப்பட்ட போதிலும், இரு அணிகளும் கோல் எதுவும் பதிவு செய்யாததால் இந்த ஆட்டம் ‘டிரா’வில் முடிந்தது.

0 Comments