Subscribe Us

header ads

சவால்களை தகர்த்து; பூத்துக் குலுங்கும் புத்தளத்தைக் காணத் துடிக்கும் நகர பிதா K.A பாயிஸ்

சில வருடங்களுக்கு முன்னர் புத்தளம் நகர மண்டபத்தில் ஒரு வர்த்தக
கூட்டம் நடைப்பெற்றது.அதன் தலைப்பு  நேற்று – இன்று – நாளை .நகர சபைத் தலைவர் கே.ஏ.பாயிஸ் தான் இதற்கு தலைமைத் தாங்கினார். அந்த கூட்டத்தில் பாயிஸ் தனது எதிர்க்கால வர்த்தக முன்னோடி திட்டங்களைப் பற்றி அங்கு பிரஸ்தாபித்தார். அந்தக் கூட்டத்தில் பேசிய பேராசிரியர் ஜனாப். அனஸ் அவர்கள் இவ்வாறு கூறினார்.” இந்த திட்டங்கள் நடக்குதோ இல்லையோ …. புத்தளத்தவர் ஒருவர் இப்படியான கனவுகளுடன் இருக்கின்றாரே என்று நான் மிகவும் ஆச்சரியப்படுகிறேன்”
அன்று பாயிஸ் கூறிய அந்தக் கனவுகள் தான் இன்று அல்பா-பீடா-டெல்டா வாக உறுப்பெற்றுள்ளன.இந்தக் கனவில் தான் சிறிது தேக்கமும் ஏற்பட்டுள்ளன.
”அல்பாf” பேரங்காடி” நிருமாணம் நகர சபைக்கு பெரும் சவாலை ஏற்படுத்தியுள்ளதால் சவால்களுக்கு அஞ்சிப் பழக்கப்படாத  பூத்துக் குலுங்கும் புத்தளத்தைக் காணத் துடிக்கும் நகர பிதா பாயிஸ் மாற்றுத் திட்டங்களை கையாளத் தயாராகிவிட்டார்.   பூவா தலையா போட்டால் தெரியும், நீயா நான பார்த்துவிடு ……….. ”புத்தளம் காத்திருக்கிறது சுண்டப்படும் நாணயத்தின் தலைபக்கம் யார்பக்கம் விழப்போகிறது” என்று பார்க்க.
இலங்கையை ஆசியாவின் ஆச்சரியமக ஆக்க ஜனாதிபதிக்கு உள்ள துடிப்புக்கு எந்த வகையிலும் குறையாத துடிப்புத்தான் நகர பிதா பாயிஸுக்கும்.  வடமேல் மாகாணத்தின் ஆச்சரியமாக புத்தளத்தை மாற்றிக் காட்ட அவர் துடிப்படிதில் என்ன தவறு இருக்கிறது? இப்போதும் கூட ஆங்காங்கு பேசப்படுகிறதே  வடமேல் மாகாணத்திலேயே துரிதமாக அபிவிருத்தியடையும் ஒரு நகர் என்று.
” நகர மத்தியில் ஒரு வர்த்தக மையம்”  இதுதான் பாயின் ஆச்சரிய நகரம்.  குருனாக்கல் வீதியில்  ”சதோச” நிறுவன விற்பனை நிலையத்துக் பக்கத்திலிருந்து தொடங்கி கொழும்பு வீதி வழியாக  புத்தளம் நகர மண்டபம் வரையில் உருவாகப்போகும், அல்லது பாயிஸ் உருவாக்கத் துடிக்கும்  புத்தம் புதிய நவீன நகரம்தான் அந்த ” வர்த்தக மையம்”
போதிய அளவு நில‌ம் தேவை எனக் கேட்டபோது  புத்தளம் மாவட்ட செயலாளர், புத்தளம் பிரதேச செயலாளர் உள்ளிட்ட அரச நிருவாக இயந்திரம் 10 ஏக்கர் நிலைத்தை தாரை வார்த்துக் கொடுக்க வேண்டிய அனைத்து செயற்பாடுகளையும் செய்து முடித்த பின்னர்தான்  ”அல்பா”  ”பீட்றா”  ” டெல்டா” என்று மூன்று  பேரங்காடிக் கட்டிங்களை உருவாக்கும் செய்றபாட்டை புத்தளம் நகர சபையின் எகோபித்த ஒப்புதலுடன் மேற்கொண்டார் நகர பிதா பாயிஸ்.
”அல்பா” பேரங்காடியில் கடை அ‌றைகளை ஒதுக்குவதற்காக  கேள்விகள் வரவழைக்கப்பட்டன.  நீ முந்தி நான் முந்தி என்று போட்டி போட்டுக்கொண்டு  கேள்விகளைச் சமர்ப்பித்தார்கள் புத்தளத்து வியாபரிகள்.
கிடைத்த கேள்வி‌களை வைத்து ‌ 2014 ஜுன் மாதத்துக்கு முன்னர் நிருமாணப் பணிகளின் முதற்கட்டத்‌தை ஆரம்பிக்க முடியும்   என்ற நம்பிக்கை சபைக்கு பிறந்தது. ஆனால்  கேள்வி விதிகளின் பிரகாரம் கேள்விகள் ஏற்கப்பட்டு 15 நாட்களுக்குள் முதற் கட்ட கொடுப்பனவை செய்யுமாறு அறிவித்தல் விடு்க்கப்பட்டபோது அந்த எதிர்பார்ப்பு  பெரிதாக சாத்தியப்படவில்லை.
விண்ணப்பித்தோரில் 12 பேர் மாத்திரமே பணம் செலுத்த ஏனையோர்  மௌனமாகிவிட்டார்கள்.  அப்படி மெனமாகியதால் ஒருவொரு கேள்வி தாரருக்கும் ஏற்பட்ட நட்டம்  ரூபா. 15,000.00; அதாவது கேள்வி பிணை பணம் பறிமுதல் செய்யப்பட்டு விட்டது.
“Something wrong somewhere”  என்று சொல்வதற்கில்லை.  பிழை எங்கு ஏற்பட்டது என்பது ஊரறிந்த உண்மை.  பாயிஸ் முதலாவது நகர சபைத் தலைவர் பதவிக் காலத்தில் ”மிலனியம் சிற்றி” உத்தேச கடைத் தொகுதி நிருமாணப் பணிக்கு நடந்தது இங்கும்  நடக்கலாம் என்ற அச்சம்தான் இதற்குக் காரணம்.
”மிலனியம் சிற்றி” நிருமாணப் பணியின் தோல்விக்கு  பாயிஸின் முதலாவது பதவிக் காலத்தில்  நகர சபைக்கு வெளியே நடந்த அரசியல் கயிறிழுப்புக்கள், சூழ்ச்சிகள் போன்றவற்றை விட சபை அலுவலகத்துக்குள் இருந்து  கொண்டு  முதுகில் குத்திய துரோகச் செயல் போன்றவை முக்கிய பங்கு வகித்தன. இதன் பிரதிபலனாக முற்பணம் செலுத்திய பலர் பாரிய அளெகரியங்களுக்கு முகங் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
மிலனியம் சிற்றி”  யின் பரிதாபத் தோல்வி ”அல்பா பேரங்காடி” விடயத்தில் அவநம்பிக்கையை ஏற்படுத்தி இருக்க முடியாது. அப்படி ஏற்படுத்தியிருந்தால்  ஒவ்வொரு  கேள்விதாரரும் 15 ஆயிரம்  ரூபாய்களை பணயம் வைத்து அந்தப் போட்டியில் இறங்கி இருக்க மாட்டார்கள்.  எனவே  கேள்விகள் ஏற்கப்பட்டு, முதல் பகுதி கட்ணத்தைச்‌ செலுத்துமாறு அறிவிக்கப்பட்ட பின்னர் யாரோ சூத்திரதாரிகள் அப்படி ஒரு மாயையை ஏற்படுத்தி இருக்க வேண்டும் என்றுதான் புலனாகிறது. ஒவ்வொருவரினதும் 15 ஆயிர்  ரூபாய்களை பணயம் வைத்து அந்தப் போட்டியில் இறங்கி இருக்க மாட்டார்கள்.  எனவே  கேள்விகள் ஏற்கப்பட்டு, முதல் பகுதி கட்ணத்தைச்‌ செலுத்துமாறு அறிவிக்கப்பட்ட பின்னர் யாரோ சூத்திரதாரிகள் அப்படி ஒரு மாயையை ஏற்படுத்தி இருக்க வேண்டும் என்றுதான் புனலாகிறது.
சுப்பர் மார்கட்” என்று புத்தளத்தவர்களால் அழைக்கப்பட்டுவரும் கடைத் தொகுதயின் வியாபாரிகள் புதிய ”அல்பா பேரங்காடி யில் தமக்கு இலவசமாக கடை ஒதுக்கப்பட வேண்டும் எ்னறு அடம் பிடிப்பதையும்  புறத்தொதுக்கிவிட முடியாது. அவர்களின் வாழ்வாதாரமும் உறுதி செய்யப்பட வேண்டும். இதுவும் பாயிஸ் எதிர்கொள்ளும் சவால்களில் ஒன்று. இந்த ”பூவா? தலையா?” போட்டியின் முடிவில் வெற்றி தன் பக்க‌மே என்ற தளராத நம்பிக்கையுடன் காரியத்தில் இறங்கியள்ளார் பாயிஸ்.
என்னதான் இருந்தாலும்  அரசியல் பகடையாட்டத்தில் நாசுக்காக் காய்களை நகர்த்தும் பாயிஸுக்கு இந்த பக‌டையாட்டம் ஒன்றும்  பெரிய காரியமாக இருக்கப் போவதில்லை.
 இருக்கும் இடத்தில் அழுது வடிக்கும்  சோபையிழந்த கட்டித்தில் இருங்கள் என்று “Shopping Complex”  கடைக்கார்களை இருக்க விட்டு அந்த கட்டிடத்  தொகுதி முடியும் இடத்திலிருந்து  ”அல்பா” வைத் தொடங்குவது.  எனவே ஒரு சவாலுக்கு பாயிஸ விடைகண்டு விட்டார். இது தொடர்பாக அண்மையில் நடந்த சபைக் கூட்டத்தின்போது ஒப்புதல் கிடைத்துள்ளதாக அறிய வ்ருகிறது.
அடுத்த சவால்தான்  கடை அறைக்காக விண்ணப்பம் செய்தவர்கள் முற்பணம் கட்ட மறுப்பதால் ”அல்பா” தோற்றம் பெறாமல் தோல்வியில் முடியும் என்ற எதிர்பார்ப்பு.   இந்த சவாலை எதிர்கொள்ள  ஏற்கனவே மக்கள் வங்கியுடன் பேச்சு வார்தைகளைத் தொடங்கியுள்ள பாயிஸ் மற்றுமொரு சுற்று பேச்சுவார்த்தைக்காக மக்கள் வங்கித் த‌லைவரிடம் நேரம் கோரியிருப்பது குறிப்பிடத் தக்கது.
பாயிஸின் இந்தத் திட்டப்படி மக்கள் வங்கி ”அல்பா” பேரங்காடி நிருமாணத்தில் முதலீடு செய்யும். நிருமாணப் பணி முடிந்ததும்  கேள்விகளை வரழைத்து தனது இலாபத்தையும் வைத்து கடை அறைகளை ஒதுக்கும், பின்னர் தனது முதலீடு கிடைத்ததும் கட்டித் தொகுதியை நகர சபைக்குக் கையளிக்கும்.  இது சாததியமாகும் சந்தரப்பங்கள் அதிகமாக இருப்பதாகத் தெரிகிறது.
இது இவ்வாறிருக்கு நகர சயையின் தூதுக் குழு ஒன்று மத்திய கிழக்கு நாடுகளுக்கு விஜயத்தை  மேற்கொண்டு அங்குள்ள இலங்கையருக்கு மத்தியில் ”அல்பா”  பேரங்காடித் தொகுதியில் முதலீடு செய்ய அவர்களைத் தூண்டுவது.  இதுவும் சாத்தியமான மாற்றுத் திட்டகளில் ஒன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மாற்றுத் திட்டஙகளில் எதாவது ஒன்று  நடைமுறைச் சாத்தியமாகும்போது ஏற்கனவே கோரப்பட்ட கேள்விகளின் பிரகாரம் கடைகளைப் பெற்றவர்கள் அக்கடைகளை  வேறு யாருக்காயினும் பறிகொடுக்க வேண்டி  வரும். மக்கள் வங்கி அத்திட்டத்ல் முதலீடு செய்து நிருமாணப் பணிகளை  நிறைவு செய்தால்  கடைகள் வெளியூர் பெரும் வியாபாரிகளின் கைக்கும் செல்லாம்.    திட்டம் நிறைறே வேண்டும், புத்தளம் அழகான நகராக வேண்டும். அதற்கு புத்தளம் மக்கள் ஒத்துழைப்பு வழங்காவிட்டால் தமக்கு மாற்ற வழி இல்லை எனச் சொல்கிறார் பாயிஸ். இப்படியான நிலைமைகள் மூலம் நமது உரிமைகளை விட்டுக் கொடுக்காமல் இதன் மூலமான நன்மைகளை அடைந்துக்கொள்ள புத்தளத்து  முஸ்லிம் சமூகம் முன் வர வேண்டும்.
இது இவ்வாறிருக்க  கடைசியாக நடந்த சபையின் மாதாந்த அமர்வின்போது ” புத்தளத்து வியாபாரிகள் கடைகளைப் பெறத் தயாராக இருக்கிறார்கள். ஆனாலும் முன்னைய அச்சம் அவர்களை சற்று தயங்க வைக்கிறது.  நிருமாணப் பணிக‌ளின் முதற் கட்ட வேலைகளைத் தொடங்கினால் அவர்கள் கட்டாயம் பணம் செலுத்துவார்கள்” என்று நகர சபை உறுப்பினர் ஏ.ஓ. அலிகாண் வலியுறுதியதாகவும்  தகவல் கிடைத்தது.
கே.ஏ.பி.யின் சைனப் முதற்கொண்டு புத்தளம் திறந்த வெளி பல்கலை வரை நடக்காது என்றுதான் கூறப்பட்டது.அதெல்லாம் இப்போது வெற்றிகரமாக நடக்கின்றன. அவரின் விஞ்ஞானக் கல்லூரிக்கு ” ஹராம் ” தரச் சான்றிதாலே ” வழங்கப்பட்டது. சில விடயங்களை நம்பித்தான் ஆகா வேண்டும், நடக்கும் என்று. இது வர்த்தக விடயம் .வயிற்றைக் கட்டி வாயைக் கட்டி சேர்த்த பணத்தை பற்றிய அக்கறை வர்த்தகர்களுக்கு இருக்கவே செய்யும். எனவே அவர்களின் பணத்துக்கான உத்தரவாதமொன்ரை அவர் கட்டாயம் வழங்கியாக வேண்டும்.
நகர சபைத் தலைவர், அவரின் அரசியல் வாழ்வில் எவ்வளவையோ பார்த்து விட்டார். அவரின் வாழ்க்கையே சவால்களாலும், போராட்டங்களாலும் நிறைந்தது. தென்றலையும் புயலையும் மாறி மாறிப் பார்த்தவர்.  பார்ப்போம் மனிதர்  என்ன செய்கிறார் என்று…!!!
( ஒனாசிஷ் )
நன்றி:puttalamtoday.com (published on 12-May-2014)

Post a Comment

0 Comments