நோய் தொற்றுக்குள்ளான நாயால் கடியுண்ட அமெரிக்க நியூயோர்க் நகரைச் சேர்ந்த
நபரொருவர் இதுவரை எவரும் கோராத அளவு நஷ்ட ஈட்டுப் பணத்தை கோரி வழக்கு
தாக்கல் செய்துள்ளார்.
அன்டன் புரிஸாமா, (62 வயது) என்ற மேற்படி நபர்
2,000,000,000,000,000,000,000,000,000,000,000,000 அமெரிக்க டொலரை நஷ்ட
ஈடாகக் கோரி மான்ஹெட்டன் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
நியூயோர்க் நகரிலுள்ள பஸ்ஸொன்றில் வைத்து விசர் நாய் தொற்றுக்குள்ளான நாய்
தனது கையின் நடுவிரலை கடித்ததாக தனது 22 பக்க முறைப்பாட்டில் புரிஸிமா
குறிப்பிட்டுள்ளார்.
தனக்கு ஏற்பட்ட வலியும் ஏனைய பாதிப்புகளும் பணத்தால் ஈடுசெய்ய முடியாதவை
எனத் தெரிவித்துள்ள அவர், தனது காயமடைந்த விரலின் புகைப்படத்தையும் அந்த
முறைப்பாட்டில் இணைத்திருந்தார்.
அவர் நியூயோர்க் நகர போக்குவரத்துச் சபை சென்லூக் அவசர சேவைப்பிரிவு
லாகாக்டியா, விமான நிலையம் நிர்வாகம் ஹெயார்பொயின்ட் ஹெல்த், ஹோபோகென்
பல்கலைக்கழக மருத்துவ நிலையம் என்பனவற்றின் மீது மேற்படி வழக்கை தாக்கல்
செய்திருந்தார்.
இது புரிஸிமாவின் முதலாவது வழக்கு தாக்கல் அல்ல. கடந்த நான்கு வருட காலப்
பகுதியில் அவர் சீன மக்கள் குடியரசு, ஜெ.பி. மோர்கன் உள்ளடங்கலான பிரதான
வங்கிகள், சமூக பாதுகாப்பு ஆணையகம் லாங் லாங் சர்வதேச சங்கீத மன்றம்
என்பவற்றின் மீது வழக்கு தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


0 Comments