இலங்கையில் முஸ்லிம்கள் மீதான எதேச்சதிகாரப் போக்கு இன்று
உறுதிப்படுத்தப்பட்டு வருகின்றமையை தற்போது அளுத்கம அழகுசாதனப் பொருட்கள்
விற்பனை நிலையம் எரிக்கப்பட்டதன் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
முஸ்லிம்கள் இந்த நாட்டில் முன்னேறி விடுவார்கள் அவர்கள் இஸ்லாத்தைப்
பரப்பிவிடுவார்கள் என்ற கர்வக் குணங்களின் வெளிப்பாடுகாளகவும் தமது
மார்க்கத்தில் நம்பிக்கையற்ற தன்மையும் அண்மைக்கால் முஸ்லிம்கள் மீதான
எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கும், மத தளங்கள் தாக்கப்படுவது, அபவிருத்தி என்ற
போர்வையில் பள்விவாசல்களை அகற்றுவதற்கு முனைவது, வியாபார நிலையங்களை
தாக்குவது, எரித்தல் என்பனவாகும்.
இதன் அடுத்த கட்ட நடவடிக்கையாக இன்ற அளுத்கம முஸ்லிம் வர்த்தகரின் வர்த்தக
நிலையம் திட்டமிட்டு எரியூட்டப்பட்ட விடயமாகும். இவ்வாறு இன்று மஸ்லிம்கள்
பல வழிகளிலும் வஞ்சிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் இதனை அரசாங்கம்
பழயை குருடி கதவத்துறடிமாதிரி சும்மா இருக்கும் நிலைதான்.
மேற்படி கைங்கரியத்திற்காக ஒரு நாடகம் திட்டமிட்டு தயாரிக்கப்பட்டு அது
பாலியல் என்ற ரீதியில் இனவாத காவி உடையர்களால் பகிரங்கப்படுத்தப்
பட்டுள்ளது. ஆறுவயது பிள்ளையை ஒருதாய் கடைக்கு அழைத்துச் சென்று தன்
கண்காணிப்பில் வைக்காது அப்பிள்ளைக்கு ஏதோ நடந்துவிட்டது என்றும் அதற்காக
உரிய முறையில் பிரச்சினையை அனுகி தீர்வு காணாது செயற்பட்டமையில் பாரியதொரு
சந்தேகமும் உள்ளது. பிள்ளையைக் கூட்டிச் சென்ற தாய் அக்கடையில் என்ன
செய்தால்? சுமார் பத்துப் பதினைந்து ஊழியர்கள் கடமையாற்றும் குறித்த
வர்த்தக நிலையத்தில் அக்கடையின் கண்காணிப்பிற்காக பாதுகாப்புக் கமராக்கள்
பொருத்தப்பட்ட நிலையில் அங்கு கடமையாற்றும் ஊழியர் குறித்த சிறுவனை பாலியல்
பலாத்காரம் செய்ததாக பொய்யான குற்றச்சாட்டுக்களை வடிவமைத்து பொலிசில்
முறையிட்டு அதன் மூலம் முஸ்லிம் சமுகத்தை முடக்கவும் அவர்களை
வன்முறைக்குள் இட்டுச் செல்லவுமே மேற்படி நாடகம் நடந்தேறியிருக்கின்றது.
பொலிஸார் கூட குறித்த விடயம் தொடர்பாக அக்கடையின் பாதுகாப்புக் கமராவினை
பரிசோதனை செய்தும் கூட குற்றத்திற்கான தடயங்கள் கிட்டாத போது ஏன் மேற்படி
விடயம் அரங்கேற்றப்பட்டுள்ளது என்று ஆராய்ந்து பார்க்கும்போது இனவாதிகளுக்க
வியாபாரத்தில் உள்ள பொறாமையும், முஸ்லிம்கள் மீது கொண்டுள்ள துவேஷ
மனப்பான்மையுமே மேற்டிச் சம்பவத்தின் மூல காரணங்களாகும்.
முன்பு பௌத்த மத சின்னங்கள் பொறிக்கப்பட்டதாக புடவை வியாபார நிலையங்களில்
உள்ள கைக்குட்டைகளில் இருப்பதாக மேற் கொள்ளப்பட்ட அடாவடித்தன நாடகத்தின்
பின்டைவு தற்போது பகிரங்கமாக பாலியல் என்ற ரீதியில் வர்த்தக நிலையங்களில்
மேற்கொள்ளப்டும் திட்டங்கள் அளுத்கம வர்த்த நிலைய விவகாரம்
வெளிப்படுத்தியுள்ளது.
இவ்வாறு கண்டவன் நெண்டவன் எல்லாம் சிறுபான்மை மக்கள் மீது சண்டித் தனம்
காட்டுவதற்கும், தாக்குதல் நடாத்துவதற்கும், உடமைகளை அழிப்பதற்கும்
முனையும்போது அவற்றைக் கட்டுப்படுத்த நாதியில்லாவிட்டால் மக்களுக்கு ஏன்
ஜனநாக ஆட்சிமுறை? ஜனாதிபதியும், அரசாங்கமும் ஆட்சி நடத்துகின்றனரா? அல்லது
இனவாத காவி உடை ஆட்சி நடத்தப்படுகின்றதா? என்ற கேள்வியே மக்கள் மத்தியில்
காணப்படும் சந்தேகமுமாகும். ஒரு நாட்டில் ஒருவன் என்னதான்
குற்றமிழைத்தாலும் அதற்கு சட்டத்துறை இருக்கின்றது, பொலிஸ் இருக்கின்றது
இவை செய்யாத வேளைகளை ஒரு குழு செய்யுமானால் அதற்கு அரசு அனுமதி
கொடுக்கின்றதா? அவ்hறு அனுமதியிருந்தால் பாராளுமன்ற உறுப்பினர்களும்,
அமைச்சர்களும் எதற்கு? என்ற கேள்வியை முஸ்லிம்கள் கேட்கின்றனர்.
ஏரியூட்டப்பட்ட குறித்த கடையானது அளுத்கம பொலிஸ் நிலையத்திற்கு குறிப்பாக
பார்ப்பதற்கு கிட்டிய தூரத்தில் இருக்கும்போது அதனை எவ்வாறு இனவாதக்
குண்டர்கள் எரிப்பார்கள்? ஆவ்வாறாயின் நாட்டின் பாதகாப்பில் பொலிஸார்
தூங்குகின்றனரா? அல்லது குண்டர்களுக்கு பயந்துள்ளனரா? என்ற சந்தேகங்களே
தற்போது முஸ்லிம்களுக்கு எதிராக மேற் கொள்ளப்பட்டு வரும் அடாவடித்
தனங்களில் இருந்து விளங்குகின்றது.
போட்டி என்பது அனைத்து விடயங்களிலும் இருக்கின்றது அதில் ஒருசாரார் அல்லது
ஒருவன் வெற்றி பெறுவதும் அதனுடன் போட்டி போடும் மற்றயவர் தோல்வியை
நலுவுவதும் இயற்கையே அதுவே அனைத்திலும் உள்ள இயல்பு. ஆனால் அதற்காக
வன்முறையை அல்லது அடாவடித் தனத்தை பிரயோகிக்க முடியுமா? இந்த போட்டித்
தன்மையினதும் இயலாத் தன்மையினதும் வெளிப்பாடுகளே முஸ்லிம் சகோதரரின்
கடையெரிப்பாகும்.
பொலிஸார் குறித் பெண்ணின் பொய்க் குற்றச் சாட்டுக்களைக் கூட ஏற்றுக்
கொள்ளாத நிலையில் அதற்கு மாற்றமாக ஒரு குறித்த குழுவினர் சட்டத்தை கையில்
எடுத்து ஆர்ப்பாட்டம் செய்ததும் அதன் பின்னனியில் நல்லிரவில் கடையை
எரித்ததும் இந்த நாட்டின் அரஜாகம் தலை தூக்கியுள்ளமையை
வெளிப்படுத்துகின்றது.
மேற்படி நிலையில் அதி உச்ச கட்ட நடவடிக்கையை எடுக்கவேண்டிய ஜனாதிபதியின்
இறுதியான முடிவின்பால் முஸ்லிம்கள் இன்றுள்ளனர். ஏனெனில் ஒரு மாற்றுமத
ஜனாதிபதிக்கு ஒரு முஸ்லிம் நாடு அதி உயர் பட்டமான கலீபாப் பட்டத்தை
வழங்கியுள்ளது. இது எதற்காக? ஏன்? வழங்க்கப்பட்டன என்பதெல்லாவற்றினதும்
பின்னயில் இந்த நாட்டின் சிறுபான்மையான முஸ்லிம்களை எதுவித குறைகளுமின்றி
நிம்மதியாக வாழ வழி செய்வார் என்ற தூர நோக்குடனான சிந்தனைக்கு அப்பால்
வழங்கப்பட்டதாகும்.
எனவே இவற்றை சிந்தனையுடையவர்கள் சிந்திப்பார்கள் அதன் மூலம் அதற்கு மரியாதை
கொடுப்பார்கள். ஆனால் பெரும்பான்மை இனவாதக் கும்பலுக்க ஜனாதிபதியை
முஸ்லிம் சமுகம் உயர்வாக மதித்து கௌரவம் வழங்கியமை பிடிக்கவி;ல்லையோ
என்றும் நினைக்கத் தோன்றுகின்றது.
இன்று இலங்கையில் முஸ்லிம்களுக்கு ஏற்படுத்தப்பட்டு வரும் மத நிந்தனைகள்,
உடல், உள கஷ்டங்கள் மற்றும் முஸ்லிம்களின் வளர்ச்சியையும், உயர்ச்சியையும்
கட்டுப்படுத்த போடப்படும் பல தடைகளையும் முஸ்லிம்களால் கட்டுப்படுத்த
முடியாது மாறாக இன்று முஸ்லிம் சமுகம் இலங்கையில் நம்ப வேண்டிய ஒருவராக
ஜனாதிபதி காணப்படுகின்றார். இந்த வகையில் நம்பிய மக்கள் பாதிக்கப்படும்போது
கைகொடுக்கவேண்டும் மாறாக தெரியாது என்று கூறி முஸ்லிம் சமகத்தினை
புறந்தள்ள வேண்டாம் என்பதே பாதிக்கப்படும் முஸ்லிம் சமுகத்தின் ஒரே
எதிர்பார்ப்பாகும்.
நீதி விசாரணை மூலம் ஒருவர் குற்றவாளி என்றால் அதற்கு தாராளமாகவே தண்டனைகள்
இருக்கும்போது இங்கு மனிதாபிமானமும், சட்ட ஓழுங்கும் கடைப்பிடிக்கப்படாது
நான்தான் சண்டியன் என்றவாறு நடாத்தப்பட்ட மேற்படி விடயத்திற்கான நீதி
விசாரணை பக்கச்சார்பின்றி நடத்தப்பட்டு குறித்த கடை எரிப்புச் சம்பவத்தின்
அனைத்து சூத்திரதாதிகளுக்கும் வழங்கப்படும் கடுமையான தண்டனை மூலமே எதிர்
காலத்தில் இதுபோன்ற அடாவடித் தனங்கள் இடம்பெறாதிருக்கும் என்பதே அனைவரதும்
எதிர்பார்ப்பாகும்.
எனவே அரசாங்கம் குறித்த வர்த்தகரின் முழுமையான இழப்புக்களை ஈடு செய்து
குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை வழங்கினால் எதிர்காலத்தில் முஸ்லிம்
சமுகத்திற்கு இவ்வாறான ஏற்படாதிருக்கும் இந்தவகையில் ஜனாதிபதி கலீபாப்
பட்டத்தை ஒருமுறை ஞாபகமூட்டி முஸ்லிம்கள் மீதான பாரபட்சமற்ற முடிவை
எடுக்கவேண்டும் என்பதே சகல முஸ்லிம்களினதும் எதிர்பார்ப்பாகும்.

.jpg)
0 Comments