Subscribe Us

header ads

வலைத்தள தடைக்கு மனித உரிமை ஆணைக்குழுவின் பதில் என்ன

Hisham Hussain - Puttalam
செய்தி வலைத்தளங்களை தொடர்ந்து முடக்கப்படுவதற்கு எதிராக இலங்கை தொழில்ரீதியான வலைத்தள ஊடகவியலாளர் சங்கத்தினால் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவிடம் முறைப்பாடு ஒன்று சமர்ப்பிக்கப்பட்டது. இதற்காக திச்ச அத்தநாயக்க, விக்கிரமபாகு கருணாரத்ன, சிரிதுங்க ஜயசூரிய உட்பட அரசியம் சமூகத் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
கடந்த சில தினங்களாக ஸ்ரீலங்கா மிரர் வலைத்தளம் உத்தியோகபூர்வமற்ற முறையில் தணிக்கைக்கு உட்பட்டிருப்பதுடன், அவ் வலைத்தளத்தை இலங்கைக்குள் வழமைபோன்று திறக்க முடியாமலும் உள்ளது. இதனை உடனடியாக கண்டறிவதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல பீபீசீ செய்தி ஸ்தாபனத்திற்குக் கூறியிருந்தார்.
இன்றைய தினம் ஸ்ரீலங்கா மிரர் வலைத்தளத்திற்கு எதிராக மேற்கொள்ளப்படும் தடைகள் குறித்து அதன் செய்தி ஆசிரியர் கெலும் சிவந்தவும் ஏனைய செய்தி வலைத்தளங்கள் தொடர்பாக இலங்கை தொழில்ரீதியான வலைத்தள ஊடகவியலாளர் சங்கத்தின் அழைப்பாளர் பிரெடி கமகே அவர்களும் முறைப்பாடுகளை சமர்ப்பித்தனர்.
_____________________
மொழிபெயர்ப்பாளன் கருத்து:
ஜப்னா முஸ்லிம் (Jaffna Muslim) வலைத்தளமும் உத்தியோகபூர்வமற்ற முறையில் இலங்கை (இணைய சேவை வழங்குனர்) ஊடாக பார்வையிட முடியாதவாறு முடக்கப்பட்டுள்ளது.
Samabima



Post a Comment

0 Comments