Subscribe Us

header ads

தம்மை நாடு கடத்த வேண்டாமென பலஸ்தீனர்கள் இலங்கையில் போராட்டம்

நான்கு பலஸ்தீனியர்கள் இலங்கையில் போராட்டம் நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. புகலிடம் கோரி வந்த நான்கு பலஸ்தீனப் பிரஜைகளை மீளவும் சிரியாவிற்கு நாடு கடத்தப்படக் கூடிய அபாயம் காணப்படுவதாக மனித உரிமை குழுக்கள் தெரிவித்துள்ளன. கடந்த ஏப்ரல் மாதம் 26ம் திகதி குறித்த பலஸ்தீனர்களை விமான நிலையத்தில் வைத்து இலங்கை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்,

தங்களை நாடு கடத்த வேண்டாம் என குறித்த பலஸ்தீனப் பிரஜைகள் இலங்கையிடம் கோரிக்கை விடுத்துள்ளது. போலிக் கடவுச் சீட்டைப் பயன்படுத்தி நாட்டுக்குள் பிரவேசித்ததாக குறித்த பலஸ்தீனர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்தப் பலஸ்தீனர்களை மிகவும் மனிதாபிமானமற்ற முறையில் இலங்கை அதிகாரிகள் நடத்தி வருவதாகவும், நெருக்குதல்களை எதிர்நோக்கி வருவதாகவும் அல்ஜசீரா சர்வதேச ஊடகம் தெரிவித்துள்ளது. இலங்கை ஊடாக சுவீடன் செல்லவே இந்த புகலிடக் கோரிக்கையாளர்கள்முயற்சித்துள்ளனர், எனினும், இலங்கை அதிகாரிகள் அவர்களை சிரியாவிற்கோ அல்லது லெபனானிற்கோ நாடு கடத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Post a Comment

0 Comments