ஹல் சிட்டி கழகத்திற்கு எதிரான, ஆங்கிலேய எவ். ஏ. கிண்ண இறுதி ஆட்டத்தின் மேலதிக நேரத்தின்போது ரம்சே போட்ட கோல், 9 வருடங்களின் பின்னர் ஆர்சனல் கழகத்திற்கு சம்பியன் பட்டம் ஒன்றைப் பெற்றுக்கொடுத்தது.
வெம்ப்ளி விளையாட்டரங்கில் சனிக்கிழமை நடைபெற்ற இப் போட்டியின் எட்டாவது நிமிடத்தில் 2 கோல்கள் பின்னிலையில் இருந்த ஆர்சனல் கழகம், 17ஆவது, 71ஆவது, 109ஆவது நிமிடங்களில் கோல்களைப் போட்டு அபார வெற்றியீட்டியது.
இது ஆர்சனல் கழகம் வென்றெடுத்த 11ஆவது எவ். ஏ. கிண்ண சம்பியன் பட்டமாகும். இதன் மூலம் அதிக தடவைகள் எவ். ஏ. கிண்ணத்தை வென்றெடுத்த கழகம் என்ற சாதனையை மென்செஸ்டர் யுனைட்டட் கழகத்துடன் ஆர்சனல் கழகம் பகிர்ந்துகொண்டுள்ளது.
இப் போட்டியில் வெற்றி பெற்று சம்பியனாகக் கூடிய அணி என முன்கூட்டியே அனுமானிக்கப்பட்டிருந்த ஆர்சனல் கழகத்திற்கு அதிர்ச்சி காத்திருந்தது.
போட்டி ஆரம்பித்த நான்காவது நிமிடத்தில் கிடைக்கப்பெற்ற கோர்ணர் கிக்கை அடுத்து டொம் ஹட்ல்ஸ்டோன் பரிமாறிய பந்தை ஜேம்ஸ் செஸ்டர் கோலாக்கி ஹல் சிட்டிக்கு உற்சாகத்தை ஏற்படுத்தினார்.
மேலும் நான்கு நிமிடங்கள் கழித்து ஆர்சனல் கோல் எல்லையில் ஏற்பட்ட தடுமாற்றத்தை நன்கு பயன்படுத்திக்கொண்ட கேர்ட்டிஸ் டேவிஸ், கோலிலிருந்து 6 யார் தூரத்திலிருந்து ஓங்கி உதைத்து ஹல் கழகத்தின் இரண்டாவது கோலைப் போட்டு ஆர்சனல் கழகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.
எவ்வாறாயினும் போட்டியின் 17ஆவது நிமிடத்தில் சுமார் 20 யார் தூரத்திலிருந்து கிடைத்த ப்றீ கிக் மூலம் அலாதியான கோல் ஒன்றை ஆர்சனல் வீரர் சன்டியாகோ கஸோர்லா போட்டார்.
71ஆவது நிமிடத்தில் கோர்ணர் கிக்கின் உதவியுடன் கோலுக்கு மிக அருகாமையிலிருந்தவாறு ஆர்சனல் வீரர் லொரென்ன் கொஸீல்னி கோல் நிலையை 2 : 2 என சமப்படுத்தினார்.
நிர்ணயிக்கப்பட் 90 நிமிட நேரத்தில் கோல் எண்ணிக்கை 2:2 விகிதத்தில் சமமாக இருந்ததால் மேலதிக நேரம் வழங்கப்பட்டது. போட்டியின் 109ஆவது நிமிடத்தில் ஒலிவியர் கிரூட் பரிமாற்றிய பந்தை ஆரோன் ரம்சே கோலினுள் செலுத்த இறுதியில் அதுவே ஆர்சனல் கழகத்தின் எவ். ஏ. கிண்ண வெற்றியைத்தீர்மானிக்கும் கோலாகவும் அமைந்தது.

0 Comments