Subscribe Us

header ads

சவூதியில் குழந்தையொன்றின் மரணம் தொடர்பில் இலங்கை, இந்தோனேஷிய பணிப்பெண்கள் கைது

சவூதியில் குழந்தையொன்றின் மரணம் தொடர்பில் இலங்கை, இந்தோனேஷிய பணிப்பெண்கள் கைது
குழந்தையொன்றின் மரணம் தொடர்பில் இலங்கை மற்றும் இந்தோனேஷிய பணிப்பெண்கள் இருவர் சவூதி அரேபியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கூரான ஆயுதத்தால் குழந்தையின் வயிற்றுப் பகுதியில் வெட்டி கொலை செய்துள்ளதாக இந்த இரண்டு நாட்டுப் பணிப் பெண்கள் மீதும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் பிரதிப் பொதுமுகாமையாளர் மங்கல ரந்தெனிய குறிப்பிட்டார்.
இந்த சம்பவம் குறித்து சவூதி அரேபிய தூதரகத்தினால் தகவல்கள் கோரப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, கைது செய்யப்பட்டுள்ள இருநாட்டுப் பணிப்பெண்களிடமும் சவூதி அரேபிய பாதுகாப்புத் தரப்பினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பிரதிப் பொது முகாமையாளர் கூறினார்.

Post a Comment

0 Comments