Subscribe Us

ஐந்தாவது யுத்த வெற்றி விழா ஆரம்பம்

ஐந்தாவது யுத்த வெற்றி விழா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் மாத்தறை கடற்கரையில் ஆரம்பமாகியுள்ளது.

30 வருடகால யுத்தத்தில் உயிரிழந்த இராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தி கௌரவிக்கும் இந்த நிகழ்வில் முப்படைகளையும் சேர்ந்த ஏழு ஆயிரம் உறுப்பினர்கள் அணிவகுப்பில் ஈடுபடவுள்ளனர்.

வெற்றிக் கொண்டாட்டங்களின் போது மூன்று கட்டங்களாக மரியாதை அணிவகுப்புகள் இடம்பெறவுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.

இதேவேளை மாத்தறை நகரில் விசேட போக்குவரத்து திட்டமும் இன்று அதிகாலை முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண குறிப்பிட்டார்.

இதற்கமைய, பிரதான பஸ் தரிப்பிடம் மாத்தறை நகரிலிருந்து தற்காலிகமாக மாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும் மாத்தறை நகரினூடாக கொழும்பு, தங்கால்ல மற்றும் ஹம்பாந்தோட்டை நகருக்கு செல்லும் வாகன சாரதிகளை மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

Post a Comment

0 Comments