Subscribe Us

header ads

புகையிலை வெல்ல நம்மால் முடியும்.

(ஜீஸான் அசீர்,கற்பிட்டி)
புகையிலை வெல்ல நம்மால் முடியும்.  உலக புகையிலை மறுப்பு தினம் இன்று அனுசரிக்கப் படுகிறது.
நண்பர்களே புகையிலை மிக   அபாயகரமானது.  அதை  உபயோக்கிக்கும் போது உடனடியாக பாதிப்பு தெரியாது, எனவே அதை தொடர்ந்து உபயோக்கிகிரார்கள். ஆனால் புகையிலை புற்று  நோயை உண்டாக்கும் வாய்ப்புகள் அதிகம்.
புகையிலை பழக்கத்தை விட்டு விடுவது எளிதல்ல, ஆனால் புகையிலை பழக்கம் விட முடியாத ஒன்றல்ல. 
புகையிலை பிடிக்க வேண்டும் என்று தோன்றும் போது நாம் காபி, டி போன்ற பானங்களை  அருந்தலாம்.  கேரம்,  டேபிள் டென்னி ஸ் போன்ற விளையாட்டுகளை விளையாடலாம்.  ஆரம்பத்தில் சிரமமாக இருந்தாலும், சிகரெட் பழக்கத்தை விட்டு விட்டால் ஒருவர் புதிய மனிதராக உருவெடுக்க இயலும்.
புகையிலையை விட்டால் உடலில் புத்துணர்ச்சி உருவாகும். இது மருத்துவ ரீதியாக நிரூபணமானது. மன ரீதியாக மன வலிமையை பெற இயலும். குற்ற உணர்வு நீங்கும்.
இதில் அரசாங்கம் முக்கிய பங்காற்ற முடியும். அரசாங்கம் நினைத்தால் சிகரட் வணிகத்தை படிப்படியாக குறைத்து முற்றிலும் நிறுத்தி விட முடியும். ஆனால் புகையிலை  வரியின் மூலம் கிடைக்கும் வருமானத்துக்கு ஆசைப் பட்டு அரசாங்கம் புகையிலையை தடை செய்யாமல் வெறுமனே  விளம் பரங்களை    வெளியிட்டு பாவ்லா காட்டுகிறது.  
 சிகரெட் தொழிலின்  மூலம் கோடிகளைக் குவிப்பவர்கள் , தொடர்ந்து பெரும் பணம் குவிக்க தடை இல்லாத படிக்கு லாபி செய்கிறார்கள் என்றும் சொல்லப் படுகிறது.
மக்களின்  உயிருக்கு உலை வைக்கும் அரசியல்வாதிகளே, உங்கள் மனம் மாறுமா?

Post a Comment

0 Comments