Subscribe Us

header ads

பேஸ்புக் உரிமையாளர் மார் சக்கர்பேக்கிற்கு நீதிமன்ற அழைப்பானை

பேஸ்புக் தளத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான மார்க் சக்கர்பேக்கிற்கு ஈரானிய நீதிமன்றம் அழைப்பானை பிறப்பித்துள்ளது. மக்களின் தனிப்பட்ட வாழ்க்கை இரகசியங்களை பேஸ்புக் திருடுவதாக கூறி இந்த அழைப்பானை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஈரான் செய்தி நிறுவனமான இஸ்னா வெளியிட்டுள்ள செய்தியில், பேஸ்புக்கில் உறுப்பினர்களாக உள்ள ஈரான் நாட்டினருக்கு, அதன் சில செயற்பாடுகள் தனிப்பட்ட வாழ்க்கையின் இரகசியங்களில் தலையிடுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து ஈரான் நீதிமன்றம் அழைப்பானை பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஈரான் நீதிமன்றம் கடந்த வாரம் இன்ஸ்டாகிராம் (instagram) என்னும் சமூக வலைதளத்திற்கு தடை விதித்து உத்தரவிட்டது.

ஆனாலும், ஈரானிய மக்கள் இன்னும் இந்த இரண்டு வலைத்தளங்களையும் தொடர்ந்து தங்கு தடையின்றி பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments