Subscribe Us

header ads

இணைய பாவனைக்கு தனியான சிம் அட்டை!

இணைய பாவனைகளிற்கு தனியான சிம் அட்டைகளை பாவிப்பதன் மூலம்
ஆபத்துக்களை தவிர்க்க முடியும் என்றும் இணையத்தளங்கள் மூலமாக பல்வேறு குற்றங்கள் இடம்பெறுவதனால் பொதுமக்கள் அனைவரையும் கவனமாக இருக்குமாறும் பொலிஸ் ஊடக பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இக்கருத்தினை வெளியிட்டுள்ளார்.

மேலும் அவர் குறிப்பிடுகையில் இணைய பாவனைக்காக தனியான சிம் அட்டைகளை பயன்படுத்துமாறும், விசேடமாக இணையம் மூலம் வங்கி, மற்றும் முக்கிய சேவைகளில் ஈடுபடுவோர் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும்.

மேலும் இது தொடர்பாக விபரங்களை கண்டறிய குற்ற புலனாய்வுத்துறை ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இவ்வாறான இணையத்தள குற்றங்கள் பற்றிய 235 முறைப்பாடுகள் எமக்கு கிடைத்துள்ளது. அம்முறைப்பாடுகளில் 09 இணைய வங்கிகள் சம்பந்தப்பட்டதும் 34 முறைப்பாடுகள் மின்னஞ்சல் பொறிமுறை பற்றியதாகும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments