Subscribe Us

header ads

கால்பந்தாட்ட போட்டியில் புத்தளம் விம்பிள்டன் அணி வெற்றி

எம்.யூ.எம்.சனூன்

போட்டியின் இடைவேளைக்கு முன்பதாக விம்பிள்டன் அணியின் முன் கள வீரர் எம்.என்.எம்.அஹ்சனுக்கு  கிடைக்கப்பெற்ற போலினை அவர் கோல் ஆக்கினார்.

விம்பிள்டன் அணி இந்த வெற்றியின் மூலம் மொத்தமாக 4 புள்ளிகளை பெற்றுக்கொண்டுள்ளது. இதேவேளை  யாழ்.முஸ்லிம் அணி புள்ளிகள் எதுவும் பெறாத நிலையில்  இன்னும் ஒரு ஆட்டம் மிகுதி இருந்தாலும் தொடரிலிருந்து வெளியேறக்கூடிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.     
இந்த ஆட்டமானது சனிக்கிழமை மாலை (24) புத்தளம் சாகிரா தேசிய கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது.

புத்தளம் கால்பந்தாட்ட லீக் நடத்தி வரும் 35 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான கால்பந்தாட்ட தொடரின் நான்காவது ஆட்டத்தில் புத்தளம் விம்பிள்டன் அணி யாழ்.முஸ்லிம் யுனைட்டட் அணியை ஒரு கோலினால் வெற்றி கொண்டது.

Post a Comment

0 Comments