ஜனாதிபதியுடனான சந்திப்பு வெற்றிகரமாக முடிவடைந்த போதிலும்
இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையின் போதும் எமது கட்சியின் 12
கோரிக்கைகளை நிறைவேற்றக் கோருவோம். அதற்கும் அரசு உரிய
பதிலளிக்காவிடின் புதிய அரசியல் யுகத்தினை நோக்கி பயணிக்க வேண்டிய
நிலை ஏற்படும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான
விமல் வீரவன்ச தெரிவித்தார்.
இதேவேளை, இலங்கை மீதான அரசியல் ரீதியான நடவடிக்கையில் அமெரிக்கா
எதுவித மாற்றத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை. தொடர்ந்தும் அரசுக்கு
அழுத்தம் கொடுக்கும். அத்தோடு, சர்வதேசப் பிரதிநிதிகள் எமது
நாட்டுக்கு வருகை தந்து கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தி
இனங்களுக்கிடையே பிரிவுகளை ஏற்படுத்தும் செயற்பாடுகளுக்கு உதவ
முனையக்கூடாது என்றும் அவர் கோரினார்.
இது தொடர்பாக அறிவுறுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று இடம்பெற்றபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் அங்கு கருத்துத் தெரிவிக்கையில்,
கொழும்பில் கடந்த 5 ஆம் திகதி இடம்பெற்ற தேசிய சுதந்திர முன்னணியின் 2
ஆவது மாநாட்டின்போது அரசிற்கு ஆலோசனை விடுக்கும் வகையில் 12
தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தற்போது நாடு முகங்கொடுத்துள்ள
சமூக, பொருளாதார, அரசியல் நெருக்கடி தொடர்பில் எதிர்காலத்தில்
அனைத்து இனத்தவர்களும் ஒன்றிணைந்து பயணிக்கும் விதமான பொதுப்
பயணத்திற்கான தீர்மானங்களையே நிறைவேற்றியுள்ளோம். நாட்டில்
மதங்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டியுள்ளது. எமது
12 தீர்மானங்களை நிறைவேற்றுவதனூடாக நாட்டை வெற்றிப் பாதைக்கு
இட்டுச் செல்ல முடியும்.
எனவே, இது தொடர்பாக சென்ற ஞாயிற்றுக்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ
மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட தலைவர்களுடன்
பேச்சுவார்த்தை நடத்தினோம். குறித்த பேச்சுவார்த்தை வெற்றிகரமாக
முடிவு பெற்றது. இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென
ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ வாக்குறுதியளித்தார். இருப்பினும்
உறுதியளிக்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தும் கிடைக்கப்
பெறுவதில்லை.
ஆகையால் இத்தகைய காரணங்களை முன்னிலைப்படுத்தி இரண்டாம் கட்டப்
பேச்சு வார்த்தை நடத்தவுள்ளோம். அதன்போது எமது தீர்மானங்களையே
முன்வைப்போம். அதன் பின்பும் அரசு எமது கோரிக்கைகளை நிறைவேற்ற தவறின்
புதிய அரசியல் யுகத்தை நோக்கிப் பயணிக்க வேண்டிய நிலை ஏற்படும். எமது
கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற மறுத்தால் நாட்டை பிளவுபடுத்தும்
நோக்குடன் செயற்படும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகள்
மேலோங்கிவிடும்.
வட மாகாண முதல்வர் சி.வி. விக்கினேஸ்வரன் உள்ளிட்ட கூட்டமைப்பினர்
உள்நாட்டில் பிரச்சினைகளைத் தீர்க்காமல் சர்வதேசத்தை நாடுவதனால்
இலங்கை சர்வ
தேச நாடுகளின் விளையாட்டு மைதானமாகிவிடும். இந்நிலையில் இலங்கை
மீதான அரசியல் ரீதியான நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட போவதில்லை.
அமெரிக்காவின் அழுத்தம் தொடர்ந்த வண்ணமே இருக்கும்.
இந்நிலையில் இந்நாட்டின் பிரச்சினைகளைத் தீர்க்கும் நோக்குடன் வருகைதரும் தென்னாபிரிக்காவின் பிரதிநிதிகள் உள்ளி
ட்ட சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகள் தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன்
கலந்துரையாடி நாட்டில் இனவாதத்தை தூண்டிவிட முயற்சிக்கின்றனர். எனவே,
அத்தகைய பேச்
சுவார்த்தைகளுக்கு அரசு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து நாட்டை பிளவுபடுத்த முனையக்கூடாது என்றார்.


0 Comments