Subscribe Us

header ads

ஓய்வு தொடர்பில் சஹிட் அப்ரிடியின் கருத்து

அவுஸ்திரேலியாவில் நடைபெறும் 2015ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகக்
கிண்ணப் போட்டிகளுக்குப் பிறகு ஒருநாள் போட்டிகளிலிருந்து தான் ஓய்வு பெறலாம் என்று பாகிஸ்தான் சகலதுறை வீரர் சஹிட் அப்ரிடி தெரிவித்துள்ளார். ஆனால் இருபதுக்கு-20 கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.
27 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அப்ரிடி 4 ஆண்டுகளுக்கு முன்பாக டெஸ்ட் போட்டிகளிலிருந்து விடைபெற்றார்.
“2015ஆம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கெட் நான் உட்பட 2 அல்லது 3 மூத்த வீரர்களுக்கு முக்கியமானது, எனவே அதன் பிறகு நான் ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறலாம் என்றிருக்கிறேன், ஆனால் தொடர்ந்து இருபதுக்கு -20 போட்டிகளில் விளையாடுவேன் .
நான் எப்போதுமே கூறிவருகிறேன், எனது உடல் தகுதி, விளையாட்டு திறன் ஆகியவற்றைப் பொறுத்தே என் கிரிக்கெட் என்று.
தலைமைத்துவம் என்பது ஒரு வீரருக்குக் கிடைக்கும் மரியாதை. கடந்த காலத்தில் நடந்த கசப்பான அனுபவங்களை மறந்து விட்டேன், எனவே நான் தலைவராக இருக்க விருப்பப்படுகின்றேன்.
அணியில் நீடித்திருப்பதாக நான் விளையாடுவதில்லை, என்னிடம் உள்ள ஆட்டட்திறனை நாட்டுக்காக எப்பவுமே கொடுத்திருக்கிறேன்”  என்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் ஐ.பி.எல் போட்டிகளில் பாகிஸ்தான் வீரர்கள் இந்தியாவில் சென்று விளையாட வேண்டும் என்பதே அனைவரது விருப்பம் என்று தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments