இலங்கையின் புதிய வீதி கட்டமைப்பு வரைபடத்தின் தாயாரிப்பு பணிகள்
நிறைவடைந்துள்ளதாக இலங்கை நில அளவைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அடுத்த மாதம் அளவில் புதிய வரைபடத்தினை வெளியிடத் தீர்மானத்துள்ளதாக மேலதிக நில அளவையியலாளர் பீ எம் பீ உதயகாந்த குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள அதிவேக வீதிகளும் இந்த வரைபடத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
புதிய அபிவிருத்தி திட்டங்களின் ஊடாக நிர்மாணிக்கப்பட்ட அனைத்து வீதிகளும் குறித்த வரைபடத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
விசேடமாக
வாகனப் போக்குவரத்திற்கு பயன்படுத்தக் கூடிய அனைத்து வீதிகள் தொடர்பான
தகவல்களும் இதில் அடங்கியுள்ளதாக மேலதிக நில அளவையியலாளர் பீ எம் பீ
உதயகாந்த சுட்டிக்காட்டினார்.
மேலும் யாழ்ப்பாணம், கொழும்பு, கண்டி ,
காலி போன்ற பிரதான நகரங்களின் அனைத்து வீதிகள் தொடர்பான தகவல்களையும்
புதிய வரைபடத்தில் உள்ளடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர்
கூறியுள்ளார். newsfirst.lk


0 Comments