Subscribe Us

header ads

யானை வெடிக்கு பொது பல சேனா எனப் பயந்து வட்டரக்க விஜித தேரர் மரத்தில் ஏறினார் (படங்கள்)

ஜாதிக பல சேனாவின் செயலாளர் மற்றும் மஹியங்கனை பிரதேச சபை உறுப்பினரான வட்டரக்க விஜித தேரர் கடந்த வெள்ளிக்கிழ்மை (23) இரவு கிராந்துருகோட்டே மஹாவலி மகா விகாரைக்கு வருகை தரும் போது ஒரு சம்பவத்துக்கு முகம் கொடுக்க வேண்டியேற்பட்டது.

காட்டு யானைகளால் அடிக்கடி பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கும் இப்பிரதேசத்திற்கு முந்தைய நாள் இரவு யானைகள் வந்ததால் அப்பிரதேச விவசாயிகள் சிலர் யானை வெடி கொளுத்தியுள்ளனர். இச்சந்தர்ப்பத்தில் குழப்பமடைந்த விஜித தேரர் அருகில் இருந்த காட்டில் உள்ள மரத்தில் ஏறி இரவைக் கழித்ததாக அறியக்கிடைக்கின்றது.

கடந்த தினங்களில் விஜித தேரருக்கு பொது பல சேனா பயங்கரவாதிகளால் மரண அச்சுருத்தல் விடுக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக பொது பல சேனாவினர் தன்னைக் கொலை செய்ய வருகிறார்களோ எனப் பயந்து விஜித தேரர் குழப்பமடைந்ததாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிகின்றன.

பட உதவி: லங்காதீப






Post a Comment

0 Comments