Subscribe Us

header ads

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்?

என்புருக்கி நோயால் அவதிப்படும் கம்புறுபிட்டியவைச் சேர்ந்த 9 வயதுச் சிறுமி சௌபாக்யா தெவ்மினி, தனது பெற்றோருடன் இன்று (29) அலரி மாளிகையில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தார்.

இச்சிறுமியை தனது மடியில் அமரவைத்து அழகு பார்த்த ஜனாதிபதி, சிறுமிக்கான மருத்துவ வசதிகளை உரிய முறையில் வழங்குமாறு கொழும்பு ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு உத்தரவிட்டார். 

கல்வி மற்றும் தனது விசேட திறமைகள் தொடர்பில் ஜனாதிபதிக்கு இதன்போது எடுத்துரைத்த அச்சிறுமி, தனது திறமைகளில் சிலவற்றையும் ஜனாதிபதி முன்னிலையில் வெளிப்படுத்தினார்.

அச்சிறுமியின் திறமைகளைப் பாராட்டிய ஜனாதிபதி, நிரந்தர வீடின்றியுள்ள அவர்களுக்கு வீடொன்றைப் பெற்றுக்கொடுக்குமாறு வீடமைப்புத்துறை அமைச்சருக்கு உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.tamilmirror



Post a Comment

0 Comments