Subscribe Us

header ads

புத்தாக்கமிக்க முயற்சியான்மையால் மாத்திரமே புத்தளம் முன்னேறும்.

(Mohamed Iflal)

எனது பட்டபடிப்பை நிறைவு செய்யும் வண்ணம் தொழிற்துறை அனுபவத்தை பெறும் நோக்கில் கடந்த டிசெம்பர் மாதம் முதல் மார்ச் ஆரம்பம் வரை எமது புத்தளம் நகர சபையில் மக்கள் தொடர்பு மற்றும் நிகழ்ச்சி வல்லுனராக பணியாற்றினேன். அந்தக் காலப்பகுத்திக்குள்...

அன்வா பெண்கள் அமைப்பில் தமது அங்ககத்தவர்களுக்கு பயனளிக்கக் கூடிய நிகழ்ச்சி ஒன்றை செய்வதற்காக எனக்கு அழைப்பு வந்தது. இலங்கை கிழக்கு பல்கலைக்கழகத்தின் B.Com பட்டதாரி மாணவராகிய நண்பன் பைசுர் ரஹ்மானையும் அழைத்துக்கொண்டு இருவருமாக புத்தளத்தின் பாரம்பரிய கட்டிட தோற்றத்தையுடைய அன்வா  அமைப்பினது செயலகத்துக்கு சென்றோம். 

நிகழ்வில் "பால் சம உரிமையும் பெண்கள் வலுவூட்டலும்" என்றத் தலைப்பில் பெண்களை வலுவூட்டுவது மாத்திரமின்றி கல்வியில், தொழில் துறைகளில், வருமானம் உழைக்ககூடிய வியாபாரங்களை தாம் எவ்வாறு முன்னெடுக்கலாம் என்பதையும் இதுத் தொடர்பான விழிப்புணர்வு பிரச்சாரங்களை எப்படி செய்யலாம் என்பன பற்றியும் நாம் அவர்களுக்கு தெளிவுபடுத்தினோம்.

குறித்த நிகழ்வைத் தொடர்ந்து சந்தித்த தனிநபர்கள், கலந்துக் கொண்ட நிகழ்வுகள் யாவுமே எமது சமூகத்தின் உதிப்பிற்கு துனைப்புரிய வேண்டியதாக மாற்றிக் கொண்டோம்.

இன்று, நாம் எமது கவனத்தை திருப்பியுள்ள முக்கியமான விடயம் தான்; புத்தளத்தின்  புத்தாக்க முயாற்சியான்மையின் அவசியமும் அம்முயற்சிகளை எவ்வாறு தோற்றுவித்தல் என்பன சார்ந்ததாகும்.

எமது சமூகத்தின் பொருளாதாரத் துறையில் காணப்படும் பாரம்பரிய குறைப்பாடாக வியாபாரத்தில் புத்தாக்கம் குன்றிய, நஷ்டங்கள் நிறைந்த, வெறுமையை நாம் கண்டுவருகின்றோம்.  

வளர்ச்சி பெறும் உலகின் ஏனைய எல்லா நகரங்களும்; புதிது புதிதாக முளைவிட்டு வளரும் முயற்சியாண்மை வியாபாரங்களை அடிப்படையாகக் கொண்டே உருமாற்றம் கண்டு வருகிறது என்பது நாம் அண்மையில் உணர்ந்துக் கொண்ட நூதன யதார்த்தமாகும்.

பாரம்பரியமாக நகரங்களின் வளர்ச்சி பாதைக்கு பல்வேறு இயற்கை வளங்களும், அப்பிரதேசத்தின் பொருளாதார முயற்சி நடவடிக்கைகளும் இன்னும் ஏனைய இயற்கை காரணிகளும் செல்வாக்கு செலுத்தி வருகின்றன.

புத்தளத்தில் முயற்சி செய்யக்கூடிய சிறந்த முயற்சியாண்மை திட்டமானது;  எமக்கே இருக்கின்ற வளங்களை, எம்மிடையே தொழிற்சார் திறன்சார் தகைமைகள் கொண்ட பொருத்தமானவர்களை இணைத்துக்கொண்டு குறுகிய அல்லது நீண்ட காலத்தில் இலாபம் ஈட்டக் கூடிய புத்தாக்க வியாபாரத் திட்டமாக அமைய வேண்டும்.

கால மாற்றத்தோடு இணைந்ததாக சர்வதேச அல்லது பிற பிரதேச வியாபரம் ஒன்றை உள்நாட்டு அல்லது உள்ளூர் கலாச்சாரங்களுக்கு ஏற்ற விதத்தில் ஆக்கப்பூர்வமான மாற்றங்களோடு நமது பிரதேசத்தில் தோற்றுவித்தலும் முயற்சியான்மையின் ஒரு வகையாகும்.    

புத்தளத்தின் பொருளாதாரம் தளம்பல் இல்லாத உயர் நிலைத் திசையை நோக்கி பயணிக்க வேண்டும் என்றால்; எம்மவர்களில் முயற்சியுடையோர் அதிகம் உருவாகவேண்டும், அவர்கள் பல்வேறு ஆய்வுகளை செய்ய வேண்டும், நிதித் தேவைகளுக்கு புது வழிகளை திரட்ட வேண்டும், நிதியாளர்கள் முயற்சியாளர்களை ஊக்குவிக்க வேண்டும், திறமையுள்ளவர்களை முயற்சியாளன் இனம்கண்டு சந்தர்ப்பம் வழங்க வேண்டும். இப்படியே சகலத் துறையிலும் நம்மவர்கள் வளர்ச்சிபெற்று நமது பிரதேசம் வளம்பெற வேண்டும்.      

இன்ஷா அல்லாஹ் இந்தக் கனவு நனவாக; எமது பிரதேசத்தில் புத்தாக்கமிக்க முயற்சியான்மையைத் தோற்றுவிப்பதற்கான முயற்சிகள் மிக விரைவில் முன்னெடுக்கப்படவுள்ளன.

பாடசாலை மாணவர்கள் தொடக்கம் பாடசாலை கல்வியை தொடர்ந்து ஏனைய உயர் கல்வியைத் தொடர்வோர், புதிதாக வியாபாரங்களில், தொழில்களில் ஈடுபடுபவர்கள், ஆர்வமுடைய வீட்டுப் பெண்கள், முதலீட்டாளர்கள் போன்ற தமது திறமைகள் திறன்களை முயற்சி செய்து பார்க்க ஆர்வமுடையவர்களை, நமது பிரதேசத்தின் முயற்சியாளர்களை; இனம் கண்டு அவர்களை வழிகாட்டி, உதவிகளை பெற்றுக்கொடுத்து, வெற்றியை நோக்கி பயணிக்கும் முயற்சியாளர்களை உருவாக்கும் பயணமிது.       

மூத்த இளம் முயற்சியாளர்கள், சமூகப் பொது நிறுவனங்கள், பாடசாலை நிர்வாகங்கள், பழையமாணவர் கழகங்கள், விளையாட்டுக் கழகங்கள், தொழிற்துறை சங்கங்கள், விளையாட்டு கழகங்கள், தன்னார்வத் தொண்டர்கள், நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வதில் ஆர்வம் கொண்டவர்கள் எம்மோடு இணைந்து புத்தளத்தை பலம் சேர்க்க தயாராகுங்கள்.

Post a Comment

0 Comments