Subscribe Us

header ads

சர்வதேசத்தை நோக்கி நகரும் புத்தளம் இளைஞர்கள்

Silent Media

இதுவரைக் காலமும் புத்தளத்தில் இருக்கும் இளைஞர்கள் சர்வதேச அளவில் நடைபெறும் நிகழ்வுகளுக்கு செல்வது குறைவு அல்லது செல்வது கிடையாது என்றே கூற வேண்டும். ஆனால் கடந்த வருடம் நடைப்பெற்ற பொதுநலவாய இளைஞர் மாநாட்டிலே புத்தளத்தை சேர்ந்த ஆறு இளைஞர்கள் பங்கு கொண்டது மட்டும் அல்லது அதிலே முக்கிய ஒரு பதவியையும் அடைந்துகொண்டார்கள். அவர்களுக்காக புத்தளத்தில் ஒரு வரவேற்பு நிகழ்வும் நடைப்பெற்றதை நாம் அறிவோம்.

அதற்கு அடுத்த படியாக சுமார் மூன்று கிழமைகளுக்கு முன்னாள் இலங்கையில் உலக இளைஞர் மாநாடு நடைப்பெற்றது
அதிலே சுமார் 700 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பல நாடுகளில் இருந்து வந்து பங்குகொண்டார்கள். புத்தளத்தை சேர்ந்த ஷாகிர், ஆகிப், சாஜித், ருச்லான் ஆகிய இளைஞர்கள் இந்த நிகழ்வில் தொண்டர்களாகவும், சதாம், அசீமுல்லாஹ் ஆகிய இளைஞர்கள் வளவாலர்களாகவும் கலந்து கொண்டனர். இந்த சர்வதேச நிகழ்வுகளில் கலந்து கொண்டதன் மூலம் பல பிரபலங்களை சந்திக்கக்கூடிய வாய்ப்புகளும், வெளிநாட்டு இளைஞர்களோடு நட்பு கொள்வதற்கான சந்தர்ப்பமும், தமது திறமைகளை வெளிப்படுத்தி அத்தோடு பல மேலதிக உலக அறிவுகளையும் பெறுவதற்கான சந்தர்ப்பங்களை அடைந்தனர்.

இந்த சர்வதேச நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து இளைஞர்களும் Silent Volunteers என்கின்ற தன்னார்வ தொண்டர் குழு ஒன்றின் மூலம் ஊக்குவிக்கப்பட்டவர்களே என்பது சிறப்பம்சமாகும். புத்தளத்தில் சுமார் ஒரு வருடத்தை தாண்டி இயங்கி வரும் இந்த தன்னார்வ தொண்டர் அமைப்பு மேலும் புத்தளத்தில் பல தொண்டர்களை இளைஞர்கள் மத்தியில் இருந்து உருவாக்க பல இளைஞர்களின் துணையோடு முயற்சித்து வருகிறது, அதுமட்டுமல்லாது பெண்கள் மத்தியிலும் ஒரு கிளையை உருவாக்கி அதன் மூலம் ஏழை பெண்களுக்கு நல்ல பல சேவைகளையும் செய்ய தயாராகிவருகிறது.

இன்னும் இது போன்ற சர்வதேச நிகழ்வுகளுக்கு புத்தள இளைஞர்களையும் யுவதிகளையும் பங்கேற்க வைப்பதற்கான முயற்சிகளை தொடர்ந்தும் செய்யும் என்றும் அத்தோடு தமது பிள்ளைகளையும் இவ்வாறான உலக விடயங்களில் ஈடுபடுத்த முயற்சிக்க வேண்டும் என்று புத்தளம் வாழ் பெற்றோர்களுக்கு அன்பு வேண்டுகோளும் விடுக்கிறது.

Post a Comment

0 Comments