பிறந்து 5 நாட்களான குழந்தை தொடர்ந்து அழுததால், அதன் வாயில் செவிலியர் ஒருவர் டேப் ஒட்டியுள்ளார்.


பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த ரேயன் நாவல் என்பவருக்கு, செபு நகரில் உள்ள மருத்துவமனையில் குழந்தை பிறந்துள்ளது.
இந்நிலையில் இவர் தனது பேஸ் புக் பதிவில், அவரது பிறந்து 5 நாட்களான தனது குழந்தையின் மேல் உதட்டில் இருந்து கன்னம் வரை ஒரு டேப் ஒட்டப்பட்ட படத்தை வெளியிட்டு உள்ளார்.
மற்றொரு படத்தில் அந்த டேப் கன்னத்தில் உள்ளது. மேலும் தனது மனைவி அங்குள்ள செவிலியர்களிடம் குழந்தையின் வாயில் ஏன் டேப் ஒட்டபட்டு உள்லது என கேட்டதற்கு குழந்தை அதிகம் அழுததால் டேப் ஒட்டபட்டு உள்ள என கூறியதாக எழுதி உள்ளார்.
மேலும், அவர் எழுதி உள்ளதாவது, இவரது மனைவி, உடனடியாக அங்குள்ள செவிலியரிடம், எதற்காக வாயின் மேல் பகுதியில் டேப் ஒட்டபட்டு உள்ளது என்று விசாரித்துள்ளார். அதற்கு அங்குள்ள செவிலியர்கள் உங்கள் குழந்தை அதிகமாக சத்தமிடுகிறான்( அழுகிறான்) எனவேதான் வாயில் டேப் ஒட்டி உள்ளோம் என கூறியுள்ளனர்.
பின்னர் தாய் குழந்தையின், வாயில் உள்ள டேப்பை அப்புற படுத்த கேட்டு கொண்டு உள்ளார், ஆனால் அதற்கு செவிலியர் மறுத்து விட்டார். இதை தொடர்ந்து தாயே அப்புறபடுத்தி உள்ளார்.
பின்னர் இது குறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் கூறி உள்ளார்.நிர்வாகம் இது தொடர்பாக விசாரணை நடத்துவதாக கூறி உள்ளது.
0 Comments