Subscribe Us

header ads

கண்ணை குத்திய காதல்: கம்பளையில் நடந்த சம்பவம்

கம்­ப­ளையில் கடந்த வாரம் இடம் பெற்ற ஒரு சம்­பவம் கம்­பளை பகுதி வாழ் முஸ்­லிம்­க­ளையே திடுக்­கி­டவும் மெய்­சி­லிர்க்­கவும் செய்­துள்­ளது.

கம்­பளை நகரில் கம்­ப­ளை­வெல பகு­தியில் சில முஸ்லிம் இளை­ஞர்கள் மத்­தியில் ஏற்­பட்ட வாய்த்­தர்க்கம் முற்­றிய நிலையில் விவ­காரம் கத்­திக்­குத்தில் முடி­வ­டைந்­துள்­ளது.

பால்ய நண்­பர்­க­ளான இம்­ முஸ்லிம் இளை­ஞர்கள் மத்­தியில் ஏற்­பட்ட முரண்­பாட்­டிற்கும் வாய்த்­தர்க்­கத்­திற்கும் பிர­தான காரணம் காதல் விவ­காரம் என்றும் தெரி­ய­வ­ரு­கின்­றது.

கல்விப் பொதுத் தரா­தர சாதா­ரண தரப் பரீட்­சை­யுடன் பாட­சாலைக் கல்­விக்கு முற்­றுப்­புள்ளி வைத்துக் கொண்ட 16 வயது நிரம்­பிய இளை­ஞர்கள் மத்­தி­யி­லேயே இம்­மோதல் இடம்­பெற்­றுள்­ளது.

சம்­பவ தினம் இரவு 7 மணி­ய­ளவில் தனது இரு நண்­பர்­க­ளுடன் மற்­று­மொரு சக­பா­டியை சந்­திக்கச் செல்­வ­தாக வீட்டில் கூறி விட்டுச் சென்ற இளை­ஞனே கத்­திக்­குத்­­திற்கு ஆளா­கி­யுள்ளார்.

நண்­பர்கள் மத்­தியில் ஏற்­பட்ட  வாய்த்­தர்க்கம் முற்­றிய நிலையில் ஒரு­வரை ஒருவர் தாக்க முற்­பட்ட போது  காப்­பாற்றச் சென்ற  இளை­ஞனே  முகத்தில் கத்­திக்­குத்­திற்கு ஆளா­கி­யுள்­ள­தாக பொ லிஸ் விசா­ர­னை­களின் மூலம் தெரி­ய­வந்­துள்­ளது.  இதில் மற்­றொரு இளை­ஞனின் உட­லிலும் காயங்கள் ஏற்­பட்­டுள்­ளன.

இச்­சம்­ப­வத்தில் கத்தி இவ்­வி­ளை­ஞனின் கண்ணை அண்­டிய பகு­தியை ஆழ­மாகப் ஊடு­ருவிப் பதம் பார்த்­துள்­ளது. இதனால் படு­கா­ய­ம­டைந்த இளைஞன் உட­ன­டி­யாக கம்­பளை போதனா வைத்­தி­ய­சா­லைக்கு எடுத்துச் செல்­லப்­பட்டார்.

எனினும் கம்­பளை வைத்­தி­ய­சா­லையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்­தி­யர்­களால் கண்ணை அண்­டிய பகு­தியில் பாய்ந்த கத்­தியை அகற்ற மேற்­கொண்ட முயற்­சிகள் பய­ன­ளிக்­க­வில்லை.

இதனால் அவர் உட­ன­டி­யாக கண்டி வைத்­தி­ய­சா­லைக்கு அனுப்பி வைக்­கப்­பட்டு  அங்கு வைத்­தி­யர்­களால் கத்தி அகற்­றப்­பட்­டுள்­ளது. இருப்பினும் இந்த இளை ஞன் தொடர்ந்து வைத்­தி­ய­சா­லையில் சிகி ச்சை பெற்று வரு­வதும் குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

இச் சம்­பவம் பெற்­றோர்­க­ளுக்கு மிகப் பெரும் பாடத்தைக் கற்­பித்­தி­ருக்­கின்­றது என்றால் மிகை­யா­காது. இன்­றைய இளைஞர் யுவ­திகள் மத்­தியில் தாரா­ள­மாக கைய­டக்க தொலை­பே­சிகள் புழங்கும் சூழ்­நி­லையில் பெற்­றோர்கள் பிள்­ளைகள் விட­யத்தில் அதிக கவ­னத்­துடன் நடந்து கொள்ள வேண்டும்.

கடந்த வாரம் கம்­ப­ளையை அண்­டிய புசல்­லாவ பகு­தியில் 16 வயது தமிழ் யுவ­தி­யொ­ருவர் கைய­டக்க தொலை­பே­சியில் நீண்ட நேரம் உரை­யா­டு­வதைக் கண்டு தாய் கண்­டித்­ததன் கார­ண­மாக  சுருக்­கிட்டு தனது வாழ்வையே மாய்த்துக் கொண்டாள். இச்­சம்­ப­வத்­திற்கும் காதல் விவ­கா­ரமே கார­ண­மெ­னவும் தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.

கடந்த சில வரு­டங்­களில் கண்டி மாவட்­டத்தில் முஸ்லிம் பகு­தி­களில் முஸ்லிம் யுவ­திகள் சிலர் மாற்று மத இளை­ஞர்­க­ளுடன் செல்­வ­தற்கு இருந்த கார­ணங்­களை தேடிப்­பார்த்த போது நக­ரங்­களில் நடை­பெறும் டியூசன் வகுப்­புக்­களும் இளைஞர் யுவ­தி­களின் கைகளில் புழங்கும் கைய­டக்க தொலை­பே­சி­க­ளுமே பிரதான கார­ணங்­க­ளாக இருந்­துள்­ள­தாக சமூக ஆர்­வ­ல­ரொ­ருவர் கவ­லை­யுடன் தெரி­வித்தார்.

இவ்­வா­றான சம்­ப­வங்­களை வெறும் செய்­தி­க­ளாக மாத்­திரம் கருதி மறந்து விடாது இளைஞர் யுவ­தி­களை நல் வழிப்­ப­டுத்த வேண்­டி­யது பெற்றோர்­க­ளி­னதும் ஆசி­ரி­யர்­க­ளி­னதும் உலமாக்களினதும் சமூகத் தலைவர்களினதும் கடப்பாடாகும். 

Post a Comment

0 Comments