(Hisham Hussain, Puttalam)
ஆங்கிலேய Chelsea கால்பந்தாட்டக்
கழகத்தின் முன்னணி வீரர் டெம்பா பா (Demba Ba) தனது சொந்த ஊரான செனகல்
(ஆபிரிக்கா)வில் பள்ளிவாசலொன்றை நிருமாணிக்கின்றார்.
சர்வதேச
கால்பந்தாட்ட வீரரான டெம்பா பா, பக்தியுள்ள முஸ்லிமாக அறியப்படுவதோடு,
பந்தாட்டத்தின் போது கோல் ஒன்றைப் போட்டவுடன் அந்த வெற்றிக் களிப்பை சுஜூத்
(வணங்குதல்) செய்வார். ஊடகமொன்றின் செவ்வியல் ஒன்றின் போது, 'ஒரு நல்ல
முஸ்லிம் நல்ல மனிதனாவான்.
ஆகவே, நான் நல்ல மனிதனாக இருக்க
முயற்சிக்கின்றேன்' என்று கூறினார்.
டெம்பா பா போன்று, 2007 ஆம்
ஆண்டில், மாலி நாட்டவரான ஒமர் கனூத், ஸ்பெயின் நாட்டிலுள்ள
பள்ளிவாசலொன்றின் நிருமாணப் பணிக்காக அமெரிக்க டொலர் 700,000 தனது சொந்தப்
பணத்திலிருந்து கொடுத்துதவினார்.
ஆங்கிலேய பிரிமியர் லீக் அணிகளில்,
ஆபிரிக்க நாடுகளைச் சேர்ந்த 40 முன்னணி முஸ்லிம் வீரர்கள்
விளையாடுகின்றனர். இவர்கள் தமது சமய அடையாளத்தையும் கிரியைகளையும்
வெளிப்படையாக நிறைவேற்றுவது குறிப்பிடத்தக்கது.
செய்தி மூலம்: Muslimvillage


0 Comments