மலையாளத்தில் ஆதமின் மகன் அபு எனும்
பெயரில் வெளிவந்து பல விருதுகளைப்
பெற்ற திரைப்படத்தை ஹனிபா டெக்ஸ்டைல்
நிறுவனம் தமிழில் மொழிமாற்றம்
செய்துள்ளது.
நேற்று மாலை சென்னை RKV தியேட்டரில் இதன் Preview ஷோ நடைபெற்றது. இந்நிகழ்வில் பத்திரிகையாளர்கள், திரையுலகத்தினர், சமுதாய பிரமுகர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
ஆபாசம், குத்துப் பாடல்கள், வன்முறை எதுவும் இல்லாமல், ஒரு முஸ்லிம் தம்பதியின் எளிய வாழ்வையும் அவர்களின் ஹஜ் கனவையும், அதற்காக அவர்கள் செய்யும் முயற்சிகளைம் சுற்றி அழகிய முறையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
நடிப்பு, இயக்கம் அனைத்திலும் மலையாள மண்ணின் மணமும் மதங்களைக் கடந்த மனிதநேயமும் ஓர் இந்திய முஸ்லிமின் வாழ்க்கை முறையும் மிளிர்கிறது.
இறந்தவர்களிடம் உதவி தேடுதல், ஹஜ் பற்றிய சில தவறான விளக்கம் இவற்றை தவிர்த்து பார்த்தால் அனைவரும் பார்க்க வேண்டிய படம்!
இந்தப் படத்தை பார்க்கும் மாற்று மத சகோதரர்களுக்கு இஸ்லாம் குறித்தும் முஸ்லிம்கள் குறித்தும் உயர்ந்த எண்ணத்தை உருவாக்கும்!
திரைப்படங்களில் முஸ்லிம்களை தவறாக சித்திரிக்கிறார்கள் எனும் குற்றச்சாட்டை விட்டு, சரியாக சித்திரிக்கும் இதுபோன்ற படங்கள் வரவேண்டும்.
மேடை போட்டு பல மணி நேரம் பேசி, பக்கம் பக்கமாக எழுதி சொல்ல வேண்டிய செய்தியை ஒரு காட்சியின் மூலமாக மக்கள் மனதில் ஆழமாக பதிக்கும் சினிமா எனும் வலிமை வாய்ந்த ஊடகத்தை இஸ்லாத்தை எடுத்து சொல்ல பயன்படுத்தும் நிலையை உருவாக்க வேண்டும்!
சகோதரர் செங்கிஷ்கான் அவர்களின் முகப் புத்தகத்திலிருந்து...

நன்றி: அல் ஹசனாத்...

0 Comments