ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாத் முக்கியஸ்தரொருவர் நேற்று அதிகாலை
4.30
மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன
தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாதின் தலைமையகத்தில் கடமையாற்றும் கெக்கிராவ
பிரதேசத்தின் கிளை பொறுப்பதிகாரியான மௌலவி அப்துல் வஹாப் நசீர்தீன் என்பவரே
மருதானை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த சம்பவம் குறித்து இன்று காலை பொலிஸ் தலைமையகத்தில் இடம்பெற்ற
ஊடகவியலாளர் மாநாட்டிலேயே பொலிஸ் பேச்சாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
"குறித்த நபர் வங்கியொன்றின் தன்னியக்க இயந்திரத்திலிருந்து நேற்று மாலை
பணத்தை பெறும் போது வெள்ளை வானில் வந்த ஒரு குழுவினர் பொலிஸார் என
தெரிவித்து இவரை கைது செய்ததாக ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாத் முக்கியஸ்தரொருவர்
மருதனை பொலிஸ் நிலையத்தில் நேற்று மாலை முறைப்பாடு செய்தார்.
குறித்த நபர் ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாத் முக்கியஸ்தர்களுக்கு மேற்கொண்ட
தொலைபேசி அழைப்புக்கள் மூலம் இன்று அதிகாலை 4.30 மணியளவில் கொட்டஹேனா
பிரதேசத்தில் கண்டிபிடிக்கப்பட்டார். இதன்போது இவர் பொய் கூறியுள்ளார்
என்றும் இது ஒரு நாடகம் என்றும் தெரியவந்தது.
மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சினையைடுத்து குறித்த நபர் இந்த மோசடி
நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து சமயங்களுக்கு இடையில் மோதல்
ஏற்படுத்த முயற்சித்தார் மற்றும் மோசடி நடவடிக்கை ஈடுபட்டார் என்ற
குற்றச்சாட்டில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தற்போது மருதனை பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இவர், நாளை
கோட்டை நீதவான் நீதிமன்றில் இவர் ஆஜர்படுத்தப்படவுள்ளார்" என்றார் பொலிஸ்
பேச்சாளர்.
இதேவேளை, மௌலவி அப்துல் வஹாப் நசீர்தீன் ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாதிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாதின் பொதுச் செயலாளர் ஆர். அப்துல்
ராசீக் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு
குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாத்தின்
உறுப்பினர்கள் அனைவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments