Subscribe Us

header ads

லேப்டாப்பை கல்யாணம் கட்டி வையுங்க - அடம்பிடிக்கும் பயல்!

ஆபாசப்படம் நிறைந்த மடிக்கணனியை திருமணம் செய்ய அனுமதி கேட்டு
நபர் ஒருவர் நீதிமன்றத்தை நாடியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உடா மாகாணத்தைச் சேர்ந்தவர் கிறிஸ் செவிர். வழக்கறிஞரான இவர், இசையமைப்பாளரும் ஆவார். அதே சமயத்தில், ஆபாசப்படங்களுக்கு அடிமையான இவர், தனது 'ஆப்பிள்' மடிக்கணனியில் நிறைய ஆபாசப்படங்களை வைத்துள்ளார். இந்நிலையில், உடாவில், ஓரினச்சேர்க்கை திருமணத்துக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டதைப் பார்த்த அவர், ஆபாசப்படம் நிறைந்த தனது மடிக்கணனியை திருமணம் செய்து கொள்வதற்காக, திருமண உரிமம் கோரி, சம்பந்தப்பட்ட துறையை அணுகியுள்ளார்.

  
ஆனால், அவரது கோரிக்கையை அத்துறை நிராகரித்தது. இருப்பினும் அவர் விடவில்லை. தனது மடிக்கணனியை திருமணம் செய்ய அனுமதி கேட்டு, நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அதை விசாரித்த நீதிபதி ராபர்ட் ஹிங்கிள், மனு கேலிக்கூத்தாக இருப்பதாக கூறி, நிராகரித்துள்ளார்.

Post a Comment

0 Comments