Subscribe Us

header ads

பொது பல சேனா திட்டமிட்டுள்ள இனக்கலவரத்திற்கு, முஸ்லிம்கள் துணைபோக கூடாது..!

(ஒற்றன்)

இன்று கம்பளை 13-05-2014 சாஹிரக் கல்லூரியில் வெசக் ஏற்பாடுகளைச் செய்வது தொடர்பில் ஏற்பட்ட கருத்து மோதல்கள், முறன்பாடுகள் காரணமாக அதற்கு எதிரக அங்கு கல்விகற்கின்ற சிங்கள மாணவர்களின் பெற்றேரும் சிங்கள மக்களும் இணைந்து நகரில் அதிபருக்கு  எதிரான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் வீதியில் சென்று கொண்டிருந்தபோது அதனைக் கேள்விப்பட்ட பிரதமர் தி.மு.ஜயரத்ன அந்த இடத்திற்கு வந்து ஆர்ப்பாட்டக்கார்களைத் தடுத்து திருத்த முற்பட்டபோது ஆர்ப்பாட்டக்கார்களுக்கும் பிரதமருக்கமிடையே வாக்குவாமும் முறுகள் நிலையும் ஏற்பட்டது.

அதிபருக்கு எதிரான ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரதமரின் கட்டளைகளை நிராகரித்து தமது ஆர்பாட்டத்தை முன்னெடுத்தனர். இந்த நிலையில் பிரதமர் தி.மு.ஜயரத்ன தலைமையில் சிங்கள முஸ்லிம்கள் ஐக்கியம் வேண்டி கம்பளை வீதிகளில்  ஆர்ப்பாட்டமொன்றும் நடாத்தினார் இந்த இரு ஆர்ப்பாட்டங்கள் காரணமாக கம்பளை நகரில் பெரும் கொந்தளிப்பும் அச்ச நிலையும் ஏற்பாட்டது

கம்பளை சாஹிராக் கல்லூரி பிரதமர் தி.மு.ஜயரத்ன கல்வி கற்ற பாடசாலை என்பதும் குறிப்பிடத்தக்கது. கம்பளை சாஹிராக் கல்லூரியில் பெருந் தொகையான சிங்கள மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். எனவே அவர்கள் 14,15,ம் திகதிகளில் வெசக் அழங்கரிப்புக்களைச் செய்ய முட்பட்ட போது அதனை பாடசாலை நிருவாகம் தடுத்து நிறுத்தியதால் அங்கு முறன்பாடுகள் தோன்றி இருக்கின்றது என்று சொல்லப்படுகின்றது. 

1915ல் கம்பளையில் நடந்த சம்பவமொன்றுதான் அன்று சிங்கள முஸ்லிம் இனக்கலவரம் தோன்றக் காரணமாக அமைந்திருந்தது. 100 வருடங்கள் கடந்த பின்னர் அதே இடத்தில் இன்று நெருக்கடிநிலை தோன்றி இருக்கின்றது.

சிங்கள முஸ்லிம் இனக்கலவரமொன்றை தோற்றுவிப்பதற்கு ஞானசாரர் தரப்பு எடுக்கின்ற முயற்சிகளுக்கு எண்ணை வார்க்கின்ற ஒரு பணியை முஸ்லிமகள் தரப்பிலிருந்து மேற்கொள்ளமல் இருப்பதற்கு அந்த சமூகம் தெரிந்திருக்க வேண்டும்.

இந்த நாட்டிலுள்ள பிரபல்யமான சிங்களப் பாடசாலைகளில் முஸ்லிம் மாணவர்கள் பெரும் எண்ணிக்கையாகக் கல்வி பயின்று வருகின்றனர். அவ்வாறான பாடசாலைகளில் முஸ்லிம் மஜ்லிஸ் என்ற பேரில் வருடந்தோரும் விழாக்கள் குறிப்பாக மீலாத் விழாக்கள் ஏற்பாடு செய்வதையும் அதற்கு அந்தப் பாடசாலை நிருவாகங்கள் ஒத்தழைப்பு வழங்கி வருவதiயும் நாம் பார்த்த வருகின்றோம். 

கம்பளை சாஹிரா போன்ற பாடசாலைகளில் சிங்கள மாணவர்கள் கல்வி பயில்கின்ற போது அவர்களும் தமது சமய நிகழ்சிகளை அங்கு மேற்கொள்வார்கள். அது அவர்களின் உரிமையும்கூட எனவே முஸ்லிம் சமூகத்திற்கு நெருக்கடிகள் ஏற்படுத்தப்படுகின்ற ஒருகால கட்டத்தில் முட்டால்தனமாக நடந்து கொண்டால் அதனால் ஏற்படுகின்ற பின் விளைவுகளுக்கு முழு சமூகமும் ஆளாக வேண்டி வரும் என்பதனை நாம் தெரிந்திருக்க வேண்டும்.

இதுவரை இல்லாத ஒரு சம்பிரதாயத்தை ஏற்படுத்த இடம் கொடுக்க முடியாது என்ற வாதத்தை இது விடயத்தில் எவராவது முன்வைப்பார்களாக இருந்தால், நியாயமாக அவர்கள் சிந்திக்கத் தயாரில்லை என்பதையும் ஒரு பிடிவாக கொள்யையும்தாம் நாம் இதில் பார்க்க முடியும். 

எனவே கம்பளை சஹிராவில் நடந்தாகச் சொல்லப்படுகின்ற சிங்கள மாணவர்களின் மத விவகாரங்களுக்கு தடைபோடும் நிகழ்சியை முஸ்லிம் புத்திஜீவிகள் தமது வருத்தத்தை பரவலாகத் தெரிவிப்பதை  அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது. 


Post a Comment

0 Comments